Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வெறும் 2 நிமிடங்களான 2 மணி நேர பயணம்.. உலகின் மிக உயர்மான பாலம் சீனாவில் திறப்பு.. வியக்க வைக்கும் தகவல்கள்!

Huajiang Grand Canyon Bridge Opened | உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் சுமார் 2,051 அடி உயரம் கொண்டதாக உள்ளது. இந்த பாலத்தால் 2 மணி நேர பயணம் வெறும் 2 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

வெறும் 2 நிமிடங்களான 2 மணி நேர பயணம்.. உலகின் மிக உயர்மான பாலம் சீனாவில் திறப்பு.. வியக்க வைக்கும்  தகவல்கள்!
உலகின் மிக உயரமான பாலம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Oct 2025 17:51 PM IST

பீஜிங், அக்டோபர் 01 : சீனாவில் (China) உலகின் மிக உயரமான பாலம் (World’s Largest Bridge) கட்டப்பட்டு வந்த நிலையில், அது தற்போது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மிகவும் பிரம்மாண்டமான தோற்றத்துடன் சுமார் 2,051 அடி உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இதுவரை பொதுமக்கள் இரண்டு மணி நேரம் செலவு செய்து பயணம் செய்து வந்த நிலையில், இந்த பாலம் அந்த பயண தூரத்தை வெறும் 2 நிமிடங்களாக குறைந்துள்ளது. இந்த நிலையில், சீனாவில் திறக்கப்பட்டுள்ள அந்த உலகின் மிக உயரமான பாலத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலகின் மிகப்பெரிய பாலம் சீனாவில் திறக்கப்பட்டுள்ளது

தற்போதைய காலக்கடடத்தில் உள்ள தொழில்நுட்ப வசதிகளின் காரணமாக அனைத்து சாத்தியமானாலும், மலை பகுதிகளில் பாலம் அமைப்பது சற்று சவாலான காரியமாக தான் உள்ளது. இருப்பினும் உலக அளவில் அதிக உயரமான பாலங்களை கொண்ட நாடாக சீனா உள்ளது. இந்த நிலையில், தான் குய்ஷோ மாகாணத்தில் புதிய பாலம் ஒன்றை சீனா கட்டியுள்ளது. இந்த பாலம் தான் தற்போது உலகின் மிக உயரமான பாலமாக அறியப்படுகிறது.

இதையும் படிங்க : 30 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்.. பழி வாங்கிய இந்திய இளைஞர்!

2,051 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பாலம்

சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த பாகத்திற்கு ஹுவாஜியாங் கிராண்டு கேன்யன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாலம் ஆற்றில் மேற்பரப்பில் இருந்து சுமார் 2,051 அடி உயர்த்தில் கட்டப்பட்டுள்ளது. இரு மலைகளுக்கு இடையே சுமார் 4,658 அடி நீளத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான பாலமாக அறியப்படும் இதனை கட்டி முடிப்பதற்கு சுமார் மூன்று ஆண்டுகளுக்கும்  மேல் ஆனதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருத்துகளுக்கு 100% வரி – அதிபர் டிரம்ப் அடுத்த அதிரடி..

இந்த பாலம் ஏற்கனவே உலகின் மிகப்பெரிய பாலம் என பெயர் பெற்ற சுமார் 1,854 அடி உயர பாலத்தின் சாதனையை முறியடித்துள்ளது. இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலத்தின் தரம் சோதனை செய்யப்பட்டது. அது வெற்றிபெற்ற நிலையில், தற்போது இந்த பாலம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 2 மணி நேரமாக இருந்த பயணம் நேரம் வெறும் 2 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ள அம்சமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.