Diwali Safety Tips: தீபாவளி நாளில் சிறுவர்களுக்கு காயம் ஏற்படும் பயமா? இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை முக்கியம்!
Diwali Safety Tips for Kids: நாளில் சிறுவர்கள் புதிய ஆடைகளை அணிந்து கொண்டு, பலவிதமான இனிப்புகளை உண்டு மகிழ்வார்கள். அதை தொடர்ந்து, பட்டாசுகளை (Crackers) வெடித்து உற்சாகமாக திரிவார்கள். இருப்பினும், சிறுவர்களை எச்சரிக்கையுடன் பாதுகாப்பதும் முக்கியம். இந்த பண்டிகை நாளில் சிறிதளவு கவனக்குறைவு கூட சிறுவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

தீபாவளி (Diwali) என்பது பட்டாசுகள், விளக்குகள் மற்றும் கோலங்களால் கொண்டாடப்படும் மகிழ்ச்சியான பண்டிகையாகும். தீபாவளி நாள் என்பது பெரியவர்களை விட சிறுவர்களுக்கு அதிக மகிழ்ச்சியை தரும். அன்றைய நாளில் சிறுவர்கள் புதிய ஆடைகளை அணிந்து கொண்டு, பலவிதமான இனிப்புகளை உண்டு மகிழ்வார்கள். அதை தொடர்ந்து, பட்டாசுகளை (Crackers) வெடித்து உற்சாகமாக திரிவார்கள். இருப்பினும், சிறுவர்களை எச்சரிக்கையுடன் பாதுகாப்பதும் முக்கியம். இந்த பண்டிகை நாளில் சிறிதளவு கவனக்குறைவு கூட சிறுவர்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதன்படி, தீபாவளி நாளில் சிறுவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க சில குறிப்புகளை உங்களுக்கு சொல்ல போகிறோம்.
பட்டாசுகளுடன் கவனம்:
தீபாவளி நாளில் சிறுவர்களை பட்டாசுகளால் ஏற்படும் அபாயங்களிலிருந்து பாதுகாக்க, பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையின் கீழ் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். சீனி வெடி போன்ற குறைந்த புகை மற்ற்ம் குறைந்த சத்தம் கொண்ட பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த அனுமதியுங்கள். மேலும், சத்தமாக அல்லது ஆபத்தான பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்காதீர்கள்.
ALSO READ: நெருங்கும் தீபாவளி.. வீட்டை சுத்தம் செய்ய இப்படி திட்டம் போடுங்க!




சிறுவர்களின் ஆடைகளில் கவனம்:
தீபாவளி பண்டிகையின்போது சிறுவர்களுக்கு முடிந்தவரை பருத்தி ஆடைகளை மட்டுமே அணிவிக்கவும். பருத்தியை விட செயற்கை துணிகள் விரைவாக தீப்பிடிக்கும். தீ விபத்து அபாயத்தை குறைக்க பட்டாசுகளை வெடிக்கும்போது சிறுவர்களுக்கு தளர்வான ஆடைகளை அணியுங்கள்.
விளக்குகளில் இருந்து கவனம்:
வீட்டை சுற்றி குறிப்பாக சிறுவர்கள் அணுகக்கூடிய இடங்களில் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை பாதுகாப்பாக ஏற்றுங்கள். விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகள் தீ மற்றும் தீக்காயங்களை ஏற்படுத்தும் என்பதை பெற்றோர்கள் சிறுவர்களுக்கு விளக்க வேண்டும்.
வாளி தண்ணீர்:
தீபாவளியன்று பட்டாசுகள் மற்றும் விளக்குகளால் ஏற்படும் தீ விபத்துகளுக்கு தயார் நிலையில் இருப்பது முக்கியம். வீட்டு மற்றும் வீட்டை சுற்றியும் தண்ணீர் அல்லது மணலை நிரப்பி வையுங்கள்.
ALSO READ: அடுத்தடுத்து பண்டிகை காலம்! சூப்பரா ஸ்வீட்ஸ் செய்ய டிப்ஸ் இதோ!
முதலுதவி பெட்டி:
தீபாவளி காலத்தில் ஏதேனும் விபத்துக்கள் மற்றும் அவசரநிலைகளை தடுக்க முதலுதவி பெட்டியை வைத்து கொள்ளுங்கள். தேவைப்படும்போது பயன்படுத்தக்கூடிய வகையில், முதலுதவி பெட்டியில் தீக்காய களிம்புகள், தீக்காயம் போடுவதற்காக கட்டுகள் மற்றும் கிருமி நாசினிகள் போன்றவற்றை கையோடு வைத்திருங்கள்.