AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று தவெக ஆர்ப்பாட்டம்.. விஜய் பங்கேற்கிறாரா?

அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், அறவே ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்.

தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று தவெக ஆர்ப்பாட்டம்.. விஜய் பங்கேற்கிறாரா?
மாநிலம் முழுவதும் இன்று தவெக ஆர்ப்பாட்டம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 12 Mar 2026 08:38 AM IST

சென்னை, மார்ச் 12: போதை பொருட்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து இன்று தவெக சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. விஜய்யின் மக்கள் சந்திப்பை முடக்கும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்ப பெற வேண்டும், சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துக் கொள்வாரா என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், விஜய் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: தட்டுப்பாடு அச்சம்.. பெட்ரோல் பங்குகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. கேன்கள், பக்கெட்டுகளில் நிரப்பிச் செல்வதால் பரபரப்பு..

வேட்பாளர்ளை நேர்காணல் செய்த விஜய்:

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து பல்வேறு கட்சிகள் சார்பில் விருப்ப மனு விநியோகம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், தவெக சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட கடந்த பிப். 6 ஆம் தேதி முதல் பிப். 20 ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடன் மார்ச் 10ம் தேதி முதல் தவெக தலைவர் விஜய் நேர்காணல் மேற்கொண்டார்.

தவெக வெளியிட்ட அறிவிப்பு:

இதுகுறித்து தவெக தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை உடனடியாக வெளியிடக் கோருகிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டிக்கிறோம்.

வழிகாட்டு நெறிமுறைகளை திரும்ப பெறுக:

அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், அறவே ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்.

இதையும் படிக்க : கேஸ் தட்டுப்பாடு – சென்னையில் கடைகளில் டீ விற்பனை நிறுத்தம்…. வடைகளின் விலை உயர்வு

இவற்றை வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், இன்று (12.03.2026) காலை 10 மணிக்கு, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகளும் தோழர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us