Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மலேசியாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்.. 6,000 மாணவர்கள் பாதிப்பு!

New COVID Variant Outbreak in Malaysia | மலேசியாவில் தற்போது புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பள்ளி மாணவர்களை பெரும் அளவில் இந்த தொற்று பாதித்து வருகிறது. இதுவரை சுமார் 6,000 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மலேசியாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்.. 6,000 மாணவர்கள் பாதிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 16 Oct 2025 20:12 PM IST

கோலாலம்பூர், அக்டோபர் 16 : 2019 ஆம் ஆண்டு உலக அளவில் கொரோனா (Corona) தொற்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்த நிலையில், தற்போது மலேசியாவில் (Malaysia) புதிய வகை கொரோனா தொற்று (New Corona Variant) பரவி வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய வகை கொரோனா தொற்றுக்கு அங்கு சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மலேசியாவில் பரவும் புதிய வகை கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவிய எக்ஸ்.எப்.ஜி என்ற புதிய வகை கொரோனா தொற்று தற்போது மலேசியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் இன்புளூயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு பலரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் மத்தியில் இந்த மர்ம காய்ச்சல் தொற்று பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. ஒரே வாரத்தில் மர்ம காய்ச்சல் பரவல் 14-ல் இருந்து 97 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : முடிவுக்கு வந்த போர்.. வீடு திரும்பும் பணயக் கைதிகள்.. இஸ்ரேல் விரைந்த அதிபர் டிரம்ப்..

தற்காலிக அடிப்படையில் மூடப்பட்டுள்ள பள்ளிகள்

மலேசியாவில் மாணவர்கள் மத்தியில் இந்த மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு பள்ளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : எகிப்தில் நடைபெறும் காசா அமைதி உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு.. இதன் முக்கியத்துவம் என்ன?

தனிமைப்படுத்தப்படும்  மாணவர்கள்

இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தங்களை தாங்களே 5 முதல் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த தொற்றை கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட வேண்டிய கொரோனா வைரஸ் என்று உலக சுகாதார அமைப்பு (WHO – World Heath Organization) வகைப்படுத்தியுள்ளது. அங்கு மாணவர்கள் நவம்பரில் இறுதி தேர்வு எழுத உள்ள நிலையில், மாணவர்கள் மத்தியில் இந்த தொற்று பரவல் அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.