வீட்டை சுத்தம் செய்யாததால் வந்த சண்டை.. கணவனின் கழுத்தை அறுத்த மனைவி!
Wife Slits Husband Throat in America | அமெரிக்காவில் வீட்டை சுத்தம் செய்யாததால் இந்தியாவை சேர்ந்த கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஆத்திரமடைந்த மனைவி கணவனை கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன், அக்டோபர் 28 : அமெரிக்காவில் (America) வீட்டை சுத்தம் செய்வதில் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி, ஆத்திரமடைந்த மனைவி கணவனின் கழுத்தை அறுத்து சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த அந்த தம்பதிகள் அமெரிக்காவில் வசித்து வந்த நிலையில், இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், வீட்டை சுத்தம் செய்யும் விவகாரத்தில் மனை, கணவனை கொலை செய்தது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வீட்டை சுத்தம் செய்யாததால் வந்த சண்டை – மனைவி செய்த கொடூரம்
இந்தியாவை சேர்ந்தவர்கள் அரவிந்த் – சந்திரபிரியா தம்பதி. இவர்கள் அமெரிக்காவின் வடகரோலினா மாகாணம் சார்லெட் நகரில் வசித்து வருகின்றனர். அரவிந்த் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். சந்திர பிரியா அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், வீட்டை சுத்தம் செய்வது தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதன் காரணமாக இவர்கள் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் தொடர்கதையாக இருந்துள்ளது.
இதையும் படிங்க : 2025: உலகின் சிறந்த காற்று தர குறியீட்டைக் கொண்ட டாப் 10 நகரங்கள் இதுதான்!
கணவனை கழுத்தை அறுத்த மனைவி
வழக்கம் போல அக்டோபர் 12, 2025 அன்று தம்பதி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், மிகுந்த கோபத்திற்கு உள்ளான சந்திரபிரியா, சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து கணவனின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த அவர் அலறி துடித்துள்ளார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு சிகிச்சைககாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க : 24 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 74 வயது முதியவர்.. காத்திருந்த ட்விஸ்ட்!
அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்திரபிரியாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலையாகியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



