Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பள்ளியின் 4வது மாடியிலிருந்து குதித்து 9 வயது சிறுமி தற்கொலை… ஜெய்ப்பூரில் பரபரப்பு சம்பவம்

Tragic Incident : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் 4வது மாடியில் இருந்து சிறுமி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பான காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

பள்ளியின் 4வது மாடியிலிருந்து குதித்து 9 வயது சிறுமி தற்கொலை… ஜெய்ப்பூரில் பரபரப்பு சம்பவம்
சிறுமி தற்கொலை செய்யும் காட்சி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 02 Nov 2025 15:28 PM IST

ஜெய்ப்பூர், நவம்பர் 2 : ராஜஸ்தான்  (Rajasthan) ஜெய்ப்பூரில் உள்ள பிரபலமான நீர்ஜா மோடி பள்ளியில் ஒரு 9 வயது சிறுமி கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த துயரமான சம்பவம் நவம்பர் 1, 2025 அன்று குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மன்சரோவர் பகுதியில் உள்ள நீர்ஜா பள்ளியில் பிற்பகல் 1.30 மணியளவில் நடந்தது. இது தொடர்பாக வெளியான சிசிடிவி வீடியோவில், சிறுமி முதலில் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த இரும்புக் கம்பியில் ஏறி சில நிமிடங்கள் அமர்ந்தபின், திடீரென கீழே குதிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. கீழே குதித்த சிறுமி அமைரா என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் சிறுமி தற்கொலை

தற்கொலை செய்துகொண்ட சிறுமி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை உடனடியைக அருகில் உள்ள மெட்ரோ மாஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். தலையில் கடுமையான காயம் ஏற்பட்டு அதிக அளவில் இரத்தம் போனதால் அவர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இதையும் படிக்க : கள்ளக்காதலை எதிர்த்த மகன்.. பணத்துடன் பிடித்த வாழ்க்கையை வாழ தாய் போட்ட மாஸ்டர் பிளான்.. திடுக்கிடும் பின்னணி!

உயிரிழந்த அமைரா அப்பகுதியில் உள்ள மன்சரோவர் பகுதியில் உள்ள துவாரகா அபார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை சூழ்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சம்பவத்துக்கு பின் பள்ளி நிர்வாகம் சிறுமி தற்கொலை செய்து கொண்ட இடத்தில் இருந்து இரத்தை கரைகளை சுத்தம் செய்து ஆதாரங்களை அழித்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

பள்ளியில் காவல்துறையினர் விசாரணை

 

அமைராவின் தாய் சிபானி தேவ், தந்தை விஜய் தேவ் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து தங்கள் மகளின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். அவர்களுக்கு மருத்துவர்கள் எவ்வளவோ ஆறுதல் கூறியும் அவர்களை சமாதனப்படுத்த முடியவில்லை குறிப்பாக சிறுமியின் தாய் என் மகளை திருப்பிக்கொடுங்கள் என கதறியது காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது.

இதையும் படிக்க : மாந்திரீகத்தில் அதிக ஈடுபாடு.. சடங்கு செய்ய மறுத்ததால் மனைவியின் முகத்தில் சுட சுட மீன் குழம்பை ஊற்றிய கணவன்!

பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது புகார்

இரவு நேரத்தில், அமைராவின் பெற்றோர் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்தனர். அதன்படி, “எங்கள் குழந்தை பள்ளிக்கு சென்றபோது முற்றிலும் நலமாக இருந்தாள். அவளுக்கு எந்த பிரச்னையும் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் பள்ளி நிர்வாகம் எதையும் வெளிப்படுத்தவில்லை. சம்பவ இடத்தைக் கூட காட்ட மறுத்தனர். இந்த மரணம் சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் நடந்துள்ளதாக தெரிகிறது.  இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்,” என்று அமைராவின் தந்தை விஜய் கோரிக்கை வைத்தார்.