Sanju Samson Trade: ராஜஸ்தான் கோரிக்கை மறுப்பு.. முக்கிய வீரர்களை விட மறுத்த சென்னை.. சஞ்சு சாம்சன் நிலைமை..?
Rajasthan Royals Explore Samson Replacement: ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறுவதற்கான வாய்ப்பு குறித்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ், சாம்சனுக்கு மாற்று வீரர்களைத் தேடி வருகிறது. ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்களின் பெயர்கள் விவாதிக்கப்படுகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் (Sanju Samson), கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் விவாத பொருளாக இருந்து வருகிறார். அதற்கு காரணம், சஞ்சு சாம்சன் தான் ஐபிஎல்லில் நீண்ட காலமாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியில் இணைய விருப்பம் தெரிவித்ததாக எழுந்த தகவல்கள் மட்டுமே காரணம். சஞ்சு சாம்சனுக்கு மாற்று வீரரை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் பல்வேறு ஐபிஎல் அணிகளை அணுகியுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் மனோஜ் படேல் இந்த விவாதம் குறித்து பரிசீலித்து வருகிறார்.
சஞ்சு சாம்சனுக்கு மாற்று வீரர் யார்..?
சஞ்சு சாம்சனுக்கு ஈடாக தான் எதிர்பார்க்கும் வீரர்களின் பட்டியலையும் மனோஜ் படேல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஹா அல்லது ருதுராஜ் கெய்க்வாட் வர்த்தம் செய்ய படேல் கேட்டுள்ளார். இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 2 முக்கியமான வீரர்களை சஞ்சு சாம்சனுக்கு எதிராக பரிமாறிக்கொள்ள விரும்பாததால், இத்தகைய ஒப்பந்தம் முறிந்ததாக நம்பப்படுகிறது. இந்த விவாதத்தில் எழுந்துள்ள மற்றொரு பெயர் சிவம் துபே, இருப்பினும் இவரது பெயரை வர்த்தகம் செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் மறுத்துள்ளது.




ALSO READ: ஐபிஎல்லில் விளையாடுவேனா..? டிசம்பர் மாதத்திற்குள் முடிவு.. எம்.எஸ்.தோனி சொன்ன எதிர்கால திட்டம்!
மறுப்பு தெரிவித்த சிஎஸ்கே:
கிடைத்த தகவலின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தங்கள் அணி வீரர்கள் யாரையும் விடுவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது. இதனால், நேரடி பரிமாற்றம் சாத்தியமற்றதாகிவிட்டது. இப்படியான சூழ்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் தவிர, மற்ற அணிகளையும் ராஜஸ்தான் ராயல்ஸ் வர்த்தகத்திற்காக அணுகி வருகிறது. வர்த்தகம் நடைபெறவில்லை எனில், சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இருந்து வெளியேறி ஏலத்தில் பங்கேற்கலாம்.
கருத்து வேறுபாடு:
Jos Buttler at Rajasthan Royals:
𝐒𝐞𝐚𝐬𝐨𝐧𝐬: 𝟕 | 𝐑𝐮𝐧𝐬: 𝟑𝟎𝟓𝟓 | 𝐒𝐑: 𝟏𝟒𝟕.𝟖 | 𝟓𝟎𝐬/𝟏𝟎𝟎𝐬: 𝟏𝟖/𝟕 | 𝐇𝐒: 𝟏𝟐𝟒
Sanju Samson was 𝐧𝐨𝐭 𝐡𝐚𝐩𝐩𝐲 with RR’s decision to release the England wicketkeeper ahead of last year’s mega auction 👀 pic.twitter.com/P0Pz8MmEWH
— Cricbuzz (@cricbuzz) August 14, 2025
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சன் நீண்ட காலமாக விளையாடி வருகிறார். மேலும், அந்த அணிக்காக பல சீசன்களாக அணியை கேப்டனாக வழிநடத்தியுள்ளார். இந்தநிலையில், வருகின்ற ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்பாக, தன்னை விடுவிக்குமாறு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் சஞ்சு சாம்சன் கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த 2 சீசன்களுக்கு மேலாக, ராஜஸ்தான் அணியின் முடிவெடுக்கும் நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. முன்னதாக, ஜோஸ் பட்லரை விடுவிப்பது குறிப்பதும், ஷிம்ரன் ஹெட்மியரை தக்கவைப்பது குறித்தும் விவாதம் எழுந்ததாக செய்திகள் வந்தன. இருப்பினும், இந்த கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், சஞ்சு சாம்சன் பொதுவெளியில் அணியை பற்றியை எதிர்மறையாக எதையும் கூறியதில்லை. எனவே, ஐபிஎல் 2016 சீசனில் சஞ்சு சாம்சனை வேறு ஒரு புதிய அணியில் காணலாம்.