MS Dhoni’s IPL 2026 Future: ஐபிஎல்லில் விளையாடுவேனா..? டிசம்பர் மாதத்திற்குள் முடிவு.. எம்.எஸ்.தோனி சொன்ன எதிர்கால திட்டம்!
MS Dhoni's IPL Return: ஐபிஎல் 2026ல் எம்.எஸ். தோனி விளையாடுவாரா இல்லையா என்ற சந்தேகம் நீடிக்கிறது. தனது முழங்கால் காயத்தின் காரணமாக டிசம்பர் வரை முடிவெடுக்க தாமதப்படுத்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தனது மருத்துவ ஆலோசனையைப் பெற்ற பின்னரே தனது முடிவை அறிவிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) எம்.எஸ்.தோனி (MS Dhoni) விளையாடுவது குறித்து இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது. ஏனெனில், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஒருவொரு சீசனிலும், ரசிகர்களின் மனதில் இருக்கும் கேள்வி என்னவென்றால், தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா இல்லையா என்பதுதான். இந்தநிலையில், சமீபத்திய நிகழ்வின்போது, எம்.எஸ்.தோனி தொடருவாரா இல்லையா என்பதை முடிவு செய்ய இன்னும் சில மாதங்கள் உள்ளன என பதிலளித்தார். தற்போது, இது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
என்ன சொன்னார் எம்.எஸ்.தோனி..?
ஒரு நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளர் தோனியிடம் ஐபிஎல் 19வது சீசனில் நீங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் களமிறங்குவீர்களா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த எம்.எஸ்.தோனி, “நான் விளையாடுவேனா, இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. வருகின்ற 2025 டிசம்பர் மாதம் வரை எனக்கு முடிவெடுக்க நேரம் இருக்கிறது. நான் இன்னும் இதுகுறித்து முடிவெடுக்க சில மாதங்கள் எடுத்துக்கொள்வேன், பின்னர் நான் முடிவு செய்யலாம்” என்றார்.




ALSO READ: மிஸ்ஸான ரஜத் படிதார் போன் நம்பர்.. கோலி, டிவில்லியர்ஸிடம் சேட்டை செய்த இளைஞர்கள்!
அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர், நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று சொன்னபோது தோனி, “எனக்கு முழங்கால் வலி, இதை யார் பார்த்து கொள்வார்கள்” என்று பதிலளித்தார். தோனி இதை சொன்னதும் அங்கிருந்த அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். தோனியின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெருகிய முறையில் வைரலாகி வருகிறது, ஆயிரக்கணக்கான மக்கள் இதை லைக் செய்து வருகின்றனர்.
நீண்ட நாட்களாக முழங்கால் காயத்தால் அவதி:
Fans shouting u have to play sir
MS Dhoni : Who will take care of knee pain and smile 😃 pic.twitter.com/v1Msz9yval
— Yash MSdian ™️ 🦁 (@itzyash07) August 10, 2025
ஐபிஎல் 2023ன்போது எம்.எஸ்.தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. அந்த சீசன் முழுவதும் தோனி முழங்காலில் கட்டு போட்டுகொண்டுதான் விளையாடி வந்தார். அப்போது, அவரது கால் தசைகள் கிழிந்தன, அதன் பிறகு அவருக்கு மும்பையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவருக்கு முழங்கால்களில் வலி உள்ளது, மேலும் ஓடுவதில் சிக்கல் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், டிசம்பரில் நடைபெறும் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு, ஐபிஎல் விளையாடுவதா இல்லையா என்பதை தோனி தனது மருத்துவரிடம் ஆலோசித்த பின்னரே முடிவு செய்வார்.
ALSO READ: உள்நாட்டு தொடரின் சிக்கலில் கோலி, ரோஹித்.. கட்டாயப்படுத்தும் பிசிசிஐ.. விரைவில் ஓய்வா..?
2025 ஐபிஎல் முடிந்த பிறகு எம்எஸ் தோனி தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுகிறார். கடந்த மாதம், அவர் தனது 44வது பிறந்தநாளை ராஞ்சியில் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடினார். ஐபிஎல் வரலாற்றில் எம்.எஸ் தோனி இதுவரை 278 போட்டிகளில் விளையாடி 5439 ரன்கள் எடுத்துள்ளார். இது தவிர, அவரது தலைமையின் கீழ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐந்து கோப்பைகளையும் வென்றுள்ளார்.