மனிதனின் ஆயுட்காலத்தை அதிகரிக்க முடியும்.. சீன நிறுவனம் அசத்தல் கண்டுபிடிப்பு!
Scientists Discover Anti-Aging Pills to Boost Human Life | மனிதர்களின் ஆயுட்காலம் ஒவ்வொரு நாட்டையும் பொருத்து வேறுபடுகிறது. மனிதர்கள் 120 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடும் என கூறப்படும் நிலையில், மாத்திரை மூலம் அதனை 150 ஆண்டுகள் வரை அதிகரிக்கலாம் என சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.
பீஜிங், நவம்பர் 12 : உலகில் பல வகையான உயிரினங்கள் வாழும் நிலையில், அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான ஆயுட் காலம் உள்ளது. மிக குறுகிய காலம் வாழும் உயிரினங்கள் உள்ள நிலையில், அதிக காலம் வாழக்கூடிய உயிரினங்களும் உள்ளன. அதாவது மெதுவான இதய துடிப்பை கொண்டுள்ள உயிரினங்கள் அதிக நாட்கள் வாழும் என்றும், வேகமான இதய துடிப்பை கொண்டுள்ள உயிரினங்கள் அதிக நாட்கள் வாழும் என்றும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் மனிதர்களின் ஆயுட்காலம் குறித்து ஒரு சுவாரஸ்ய அம்சத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
120 ஆண்டுகள் வரை வாழும் மனிதர்கள்
120 ஆண்டுகள் வரை வாழும் தன்மை கொண்டவர்களாக மனிதர்கள் உள்ளனர். ஆனால், 120 ஆண்டுகள் வரை வாழும் மனிதர்கள் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு மட்டுமே உள்ளனர். ஒருவர் 100 வயதை தாண்டினாலே அது மிகவும் அதிசயமாக உள்ளது. குறிப்பாக வெவ்வேறு காலநிலை, உணவு பழக்கம் கொண்டுள்ள மக்கள் வெவ்வேறு கால அளவிலான ஆயுட்காலத்தை கொண்டுள்ளனர். உதாரணமாக ஜப்பானியர்களின் சராசரி ஆயுட்காலம் 84 ஆண்டுகளாக உள்ளது. சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நட்டு மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 ஆண்டுகளாக உள்ளது. சீனர்களின் ஆயுட்காலம் 77 ஆக உள்ள நிலையில், இந்தியர்களின் ஆயுட்காலம் 67 ஆக உள்ளது.
இதையும் படிங்க : ரூ.69,000-க்கு விற்பனை செய்யப்படும் சேஃப்டி பின்.. அதில் அப்படி என்ன இருக்கிறது.. ஷாக்கில் பொதுமக்கள்!
மனிதனின் ஆயுட்காலத்தை அதிகரிக்க முடியும்
இந்த நிலையில், மனிதனின் ஆயுட்காலத்தை மேலும் அதிகரிக்க முடியுமா என்ற ஆய்வில் சீன ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், அவர்கள் கண்டுபிடித்த மாத்திரைகளை எலிகளுக்கு செலுத்தி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த எலிகளின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. இந்த மாத்திரைகளை மனிதர்களுக்கு கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆயுட்காலத்தை சுமார் 150 ஆண்டுகள் வரை அதிகரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நினைக்கின்றனர்.
இதையும் படிங்க : இந்தோனேசியா பள்ளி மசூதியில் குண்டு வெடிப்பு.. 55 மாணவர்கள் காயம்.. அதிர்ச்சி சம்பவம்!
இந்த ஆய்வு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லான்வி பயோசயன்ஸ் என்ற சீன நிறுவனம் ஆன்டி ஹிங் எனப்படும் இந்த முதுமை எதிர்ப்பு மாத்திரைகளை உருவாக்கி வருகிறது.