ரூ.69,000-க்கு விற்பனை செய்யப்படும் சேஃப்டி பின்.. அதில் அப்படி என்ன இருக்கிறது.. ஷாக்கில் பொதுமக்கள்!
69,000 Rupees Safety Pin | பெரும்பாலான பொதுமக்கள் சேஃப்டி பின்களை பயன்படுத்துகின்றனர். அவை ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படும். ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று சேஃப்டி பின்னை ரூ.69,000-க்கு விற்பனை செய்கிறது. இதுதான் தற்போது பேசுபொருளாக உள்ளது.
பெரும்பாலும் அனைத்து பொதுமக்களின் வீடுகளிலும் சேஃப்டி பின் (Safety Pin) இருக்கும். ஆடைகளை சரிசெய்வது உள்ளிட்ட தேவைகளுக்காக பொதுமக்கள் இந்த சேஃப்டி பின்களை பயன்படுத்துகின்றனர். மேலும் சிலர் எப்போதும் இந்த சேஃப்டி பின்களை உடன் எடுத்துச் செல்வர். ரூ.10 அல்லது ரூ.15 கொடுத்து ஒரு பாக்கெட் சேஃப்டி பின்னை வாங்கலாம். ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் ஒரே ஒரு சேஃப்டி பின்னை ரூ.69,000-க்கு விற்பனை செய்வது தொடர்பான தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.69,000-க்கு விற்பனை செய்யப்படும் சேஃப்டி பின்
இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் தான் பிரடா (Prada). இந்த நிறுவனம் ஆடம்பர மற்றும் விலையுயர்ந்த பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் சேஃப்டி பின்னின் விலை தான் தற்போது பேசுபொருளாம மாறியுள்ளது. அதாவது வெறும் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படும் இந்த சேஃப்டி பின்னை அந்த நிறுவனம் சுமார் ரூ.69,000-க்கு விற்பனை செய்கிறது. இது பலரையும் அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியுள்ளது.




இதையும் படிங்க : நைட் ஷிபிடில் வேலை அதிகமாக இருந்ததால் ஆத்திரம்.. 10 நோயாளிகளை கொலை செய்த நர்ஸ்.. ஆயுள் தண்டனை!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இந்த பிரடா நிறுவனத்தின் சேஃப்டி பின் குறித்த தகவல் இணையத்தில் வெளியான நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பெண் ஒருவர் அது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிராடாவின் புதிய பொருள் குறித்து பார்க்கலாம். அது 775 அமெரிக்க டாலர்களுக்கான சேஃப்டி பின் புரூச் (Safety Pin Brooch). பணக்காரர்களை நான் மீண்டும் ஒருமுறை கேட்கிறேன். இதனை வைத்து என்ன செய்வீர்கள்.
இதையும் படிங்க : பிலிப்பைன்ஸை புரட்டி போட்ட கடுமையான சூறாவளி.. 140 பேர் பலி!
இது குறித்து அழுவதா அல்லது சிறிப்பதா என எனக்கு தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.