Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரஷ்யாவை அடுத்து அடுத்து உலுக்கிய கடுமையான நிலநடுக்கம்.. பீதியில் பொதுமக்கள்!

Two Powerful Earthquake Strikes Russia | ரஷ்யாவில் நேற்று (நவம்பர் 03, 2025) அடுத்தடுத்து இரண்டு கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. முதல் நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலையில், இரண்டாவது நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவை அடுத்து அடுத்து உலுக்கிய கடுமையான நிலநடுக்கம்.. பீதியில் பொதுமக்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 04 Nov 2025 08:49 AM IST

மாஸ்கோ, நவம்பர் 04 : ரஷ்யாவில் (Russia) நேற்று (நவம்பர் 03, 2025) அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். ஒரே நாளில் அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கிய நிலையில், சுனாமி ஏதேனும் ஏற்படுமா என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். இந்த நிலையில், ரஷ்யாவை உலுக்கிய அடுத்தடுத்த இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரஷ்யாவை அடுத்து அடுத்து தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று (நவம்பர் 03, 2025) இந்திய நேரப்படி சரியாக மதியம் 12.40 மணிக்கு 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் (NCS – National Center for Seismology) கூறியுள்ளது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் முதலில் 52.41 டிகிரி வடக்கு அட்ச ரேகையிலும், 159.93 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மாணிக்கப்பட்டது.

இதையும் படிங்க : Melissa Cyclone: ஜமைக்காவில் கடும் சேதத்தை ஏற்படுத்திய மெலிஸா புயல்!

6.1 ரிக்டர் அளவில் பதிவான இரண்டாவது நிலநடுக்கம்

இதனை தொடர்ந்து நேற்று (நவம்பர் 03, 2025) மதியம் 2.14 மணி அளவில் அந்த பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதையும் படிங்க : வீட்டை சுத்தம் செய்யாததால் வந்த சண்டை.. கணவனின் கழுத்தை அறுத்த மனைவி!

வீதிகளில் தஞ்சமடைந்த பொதுமக்கள்

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் உள்ள கட்டடங்கள் குலுங்கியுள்ளன. இதனால் அலறி அடித்துக்கொண்டு தங்களது வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். ஒரே நாளில் அடுத்து அடுத்து ஏற்பட்ட நிலடுக்கம் காரணமாக அங்கு பொதுமக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.