Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நேபாள பனிச்சரிவில் பலியான 9 மலையேற்ற வீரர்கள்.. சடலங்கள் மீட்பு!

Yarlung Ri Peak Incident Killed 9 | நேபாளத்தில் உள்ள யாலுங் ரி மலைச்சிகரத்தில் சில மலையேற்ற வீரர்கள் மலை ஏறிக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில், அங்கு ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி அவர்கள் உயிரிழந்த நிலையில், 9 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேபாள பனிச்சரிவில் பலியான 9 மலையேற்ற வீரர்கள்.. சடலங்கள் மீட்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Nov 2025 07:35 AM IST

காத்மாண்டு, நவம்பர் 06 : நேபாளத்தில் (Nepal) யாலுங் ரி மலைச்சிகரம் உள்ளது. இது சுமார் 6 ஆயிரத்து 920 மீட்டர் உயரம் கொண்டதாக உள்ளது. இந்த மலைச்சிகரம் மீது வீரர்கள் மலை ஏறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில்,  நேபாளத்தை சேர்ந்த வழிகாட்டிகள் மற்றும் வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள் கொண்ட ஒரு குழு அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டு இருந்தது. இந்த நிலையில், அவர்கள் மலை ஏறிக்கொண்டு இருந்தபோது அங்கு திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மூன்று பேர் பலியானதாக வெளியான முதற்கட்ட தகவல்

வீரர்கள் மலை ஏறிக்கொண்டு இருந்தபோது அங்கு திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக அதில் சிக்கிக்கொண்ட வீரர்கள் மூன்று பேர் பலியானதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், மாயமானவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. அங்கு நடைபெற்ற தீவிர மீட்பு பணியில் மொத்தம் 9 மலை ஏற்ற வீரர்கள் பனிச்சரிவில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பனிச்சரிவில் சிக்கி பலியான 7 வீரர்களில் இரண்டு பேர் நேபாளத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இரண்டு பேர் இந்தியாலியர்கள் என்றும் மீதமுள்ளவர்கள் கனடா, பிரான்ஸ், ஜெர்மர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்.. அலறி அடித்துக்கொண்டு சாலை ஓரத்தில் தஞ்சமடைந்த பொதுமக்கள்!

படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட 5 பேர்

இந்த பனிச்சரிவு விபத்தில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல அக்டோபர் 28, 2025 அன்று பன்பாரி சிகரத்தில் இத்தாலி நாட்டை சேர்ந்த மூன்று மலை ஏற்ற வீரர்கள் மலை ஏறிக்கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களும் மாயமாகியுள்ளனர்.

இதையும் படிங்க : எகிப்தில் 20 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த பிரம்மாண்ட அருங்காட்சியகம் திறப்பு.. அப்படி என்ன சிறப்புகள் உள்ளன?

அவர்கள் மலை ஏறிக்கொண்டு இருந்தபோது பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த வீரர்கள்

அவர்கள் மலை ஏறிக்கொண்டு இருந்தபோது பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. அந்த மூன்று வீரர்களில் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவருடன் இணைந்து மலை ஏற்றத்தில் ஈடுபட்ட மேலும் இரண்டு வீரர்கள் குடிசைக்குள் இருந்த நிலையில், அவர்கள் அப்படியே பனிச்சரிவால் மூழ்கியுள்ளனர். பின்னர் அவர்களது உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.