பிலிப்பைன்ஸை புரட்டி போட்ட கடுமையான சூறாவளி.. 140 பேர் பலி!
Philippines Typhoon Created Huge Loss in Several Parts | பிலிப்பைன்ஸ் நாட்டில் சூறாவளியால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அங்கு இந்த சூறாவளியால் இதுவரை 140 பேர் பலியாகியுள்ளனர்.
மணிலா, நவம்பர் 07 : பிலிப்பைன்ஸ் (Philippines) நாட்டை கடுமையான சூறாவளி (Typhoon) தாக்கியுள்ளது. இதன் காரணமாக அங்கு பொதுமக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். உடமைகள், வீடுகள் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஏராளமான பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிலிப்பைன்ஸில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள சூராவளி குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிலிப்பைன்ஸை கடுமையாக தாக்கிய சூராவளி
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் கல்மேகி சூறாவளி புயல் மிக கடுமையாக தாக்கியுள்ளது. சிபுவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்களில் இந்த சூறாவளியின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் இருந்த கார்கள், வீடுகள் மற்றும் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பெரிய கப்பல்கள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ரஷ்யாவை அடுத்து அடுத்து உலுக்கிய கடுமையான நிலநடுக்கம்.. பீதியில் பொதுமக்கள்!




தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்ட சூறாவளி
வெள்ளப்பெருக்கின் வேகம் அதிகமாக இருந்த நிலையில், அங்கு பாதிப்புகளும் மிக அதிகமாக இருந்தது. லிலோன் நகரில் 35 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். அந்த பகுதியில் சூறாவளி புரட்டி போட்டதால் கார்கள் ஒன்றின் மீது ஒன்றாகவும், தலைகீழாகவும் கவிழ்ந்து கிடந்துள்ளன. கட்டடங்களின் மேற்பகுதியும் கடுமையான சேதங்களை சந்தித்து இருந்தது. இத்தகைய கடுமையான பாதிப்புகளை பிலிப்பைன்ஸ் எதிர்க்கொண்டுள்ள நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி இதனை தேசிய பேரிடராக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்.. அலறி அடித்துக்கொண்டு சாலை ஓரத்தில் தஞ்சமடைந்த பொதுமக்கள்!
சூறாவளிக்கு சுமார் 140 பேர் பலி
பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள இந்த மிக கடுமையான நிலைக்கு நிவாரண நிதிக்கான தொகையை அரசு ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டிய கட்டாயமும் எழுந்துள்ளது. இதன் காரணமாக சுமார் 5 லட்சம் பிலிப்பைன்ஸ் மக்கள் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர். இந்த நிலையில், பிலிப்பைன்ஸை கடுமையான சூழலுக்கு தள்ளிய இந்த சூறாவளி புயல் மீண்டும் கடலுக்கு திரும்பிவிட்டதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த இந்த சூறாவளிக்கு அங்கு மொத்தம் 140 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.