துபாய் ஏர் ஷோ…. இந்திய தயாரிப்பான தேஜஸ் போர் விமானம் விபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்
Fighter Jet Accident : துபாயில் நடந்த ஏர் ஷோ நிகழ்வில் இந்திய விமானப்படையின் தயாரிப்பான தேஜஸ் போர் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைலட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
துபாய் (Dubai) ஏர் ஷோவில் நவம்பர், 21, 2025 வெள்ளிக்கிழமை மதியம் நிகழ்ந்த ஒரு துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்திய விமானப்படையின் தேஜஸ்’ லைட் கம்பாட் ஏர்கிராஃப்ட் நிறுவனம் தயாரித்த இந்த உள்நாட்டு போர் விமானம் (Fighter jet) சோதனையின் போது வெடித்து சிதறியது. இந்திய நேரப்படி இந்த போர் விமானம் சரியாக நவம்பர் 21, 2025 அன்று மதியம் 2.10 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. விமானம் சில வினாடிகளுக்கு பிறகு மீண்டும் பறக்க முயன்றபோது கீழ்நோக்கி பாய்ந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதலங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விபத்துக்குள்ளான இந்திய போர் விமானம்
இந்திய தயாரிப்பான தேஜஸ் போர் விமானம் துபாயியில் நடந்த ஏர்ஷோவில் சோதனைக்காக இயக்கப்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. தரையில் மோதி விமானம் வெடித்ததில் அந்த பகுதியே அட்ந்த கரும்புகையால் சூழ்ந்தது. பாதுகாப்பு வளையத்தில் நின்று கொண்டிருந்த பார்வையாளர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பேசிய பார்வையாளர், விபத்து நடந்த ஒரு சில விநாடிகள் எங்களுக்கு எதுவும் புரியவில்லை. யாரும் அருகில் செல்லவில்லை. எல்லோரும் உறைந்து நின்றோம் என்றார்.




இதையும் படிக்க : இலங்கையில் பாலியல் தொல்லை.. நியூசிலாந்து பெண் சுற்றுலா பயணி வேதனையுடன் வெளியிட்ட வீடியோ!
போர் விமானம் விபத்துக்குள்ளான காட்சி
Pilot confirmed dead after IAF fighter jet Tejas crashes at Dubai Air Show
Read @ANI Story | https://t.co/KUAm9NpN42#IAF #DubaiAirShow #Tejas pic.twitter.com/OdzUt2plyg
— ANI Digital (@ani_digital) November 21, 2025
விபத்தில் பைலட் மரணம்
விபத்து நடந்த உடன் பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, தீ மற்றும் புகையை கட்டுப்படுத்தினர். இந்திய விமானப்படை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, தேஜஸ் விமானத்தை இயக்கிய பைலட் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என விமானப்படை உறுதி செய்துள்ளது.
இதையும் படிக்க : ஹஜ் பயணிகள் பேருந்து எரிந்து விபத்து.. 42 இந்தியர்கள் பலி என தகவல்!
இந்த நிகழ்வை பார்த்தவர்கள் மற்றும் ஏர் ஷோவில் கலந்து கொண்டவர்களை இன்னும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. காரணம் இந்த விபத்து, சமீபத்தில் நடந்த மிகப்பெரிய விபத்தாக பார்க்கப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.