Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Poop Suitcase என்றால் என்ன? அதிபர் புதின் ஏன் இதை வெளிநாட்டு பயணங்களின் போது எடுத்து செல்கிறார்?

Poop Suitcase: ரஷ்ய அதிபர் புதின் கடந்த 1999 ஆம் ஆண்டு ரஷ்ய அதிபராக பொறுப்பேற்ற போதே இந்த நடவடிக்கையை பின்பற்ற தொடங்கியிருக்கிறார். அவர் எங்கு சென்றாலும் அவரது உடல் நிலை குறித்து எந்த தகவல்களும் வேறு நாடுகளுக்கு கசிந்துவிடக்கூடாது என அவர் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

Poop Suitcase என்றால் என்ன? அதிபர் புதின் ஏன் இதை வெளிநாட்டு பயணங்களின் போது எடுத்து செல்கிறார்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Dec 2025 11:34 AM IST

டெல்லி, டிசம்பர் 5, 2025: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 23வது இந்தியா–ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் அரசு பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். ரஷ்ய அதிபரின் வருகைக்காக இந்தியா சிவப்பு கம்பளம் விரித்து பிரமாண்ட வரவேற்பு அளித்தது. இதனையடுத்து ரஷ்ய அதிபர் புதினும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே காரில் பயணித்தனர். உக்ரைனுடனான ரஷ்யாவின் போர் தொடங்கியதிலிருந்து புதினின் இது முதல் இந்திய வருகையாகும். முக்கிய துறைகளின் அமைச்சர்கள் புதினுடன் இந்தியா வந்துள்ளனர். வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் புதின் மற்றும் மோடி பல ஒப்பந்தங்களை தொடங்கி வைக்க உள்ளனர். அரசாங்கங்களுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

‘Poop Suitcase’ என்றால் என்ன?

இந்த சூழலில், அதிபர் விளாடிமிர் புதினுடன் பாதுகாப்பு சுற்றுவட்டாரத்தில் “பூப் சூட்கேஸ்” (Poop Suitcase) என்ற சொல் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் புதின் அலாஸ்கா உச்சிமாநாட்டிற்கு வருகை தந்தபோதும் இந்த விஷயம் பெரிதும் பேசப்பட்டது. அதாவது, புதினின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரது மலத்தையும் சிறுநீரையும் சேகரிக்க ஒரு பிரத்தியேக சூட்கேஸை எடுத்துச் செல்வதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: இண்டிகோ விமான ரத்து விவகாரம்…ஊழியர்களுக்கு சிஇஓ திடீர் கடிதம்!

ஏன் அதிபர் புதினின் கழிவுகளை சேகரிக்கிறார்கள்?

ரஷ்ய அதிபர் புதின் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் இந்த சிறப்பு சூட்கேஸை எடுத்துச் செல்வது வழக்கம்.

இது செய்யப்படுவதின் பின்னணி:

  • புதினின் உடல்நிலை பற்றிய தகவல்கள் வெளிநாட்டு உளவுத்துறைகளுக்கு கசிந்து விடாமல் தடுப்பது.
  • வெளிநாட்டு அரசுகள் அவரது மலத்தை பகுப்பாய்வு செய்து
  • அவரது உடல்நிலை
  • நோய்கள்
  • மருந்துகள்
  • ஹார்மோன் நிலை

போன்ற பல ரகசிய தகவல்களை அறியக்கூடிய அபாயம் இருப்பதால் இந்த முன்னெச்சரிக்கை எடுக்கப்படுகிறது. அதனால், அவர் எங்கு சென்றாலும், அவரது மலம், சிறுநீர் எல்லாம் சேகரிக்கப்பட்டு, சீல் செய்யப்பட்டு, ஒரு சிறப்பு பெட்டியில் மீண்டும் ரஷ்யாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மனிதக் கழிவு நீண்ட காலமாக உளவுத்துறையின் ரகசிய ஆயுதமாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க: ரஷ்ய அதிபர் புதினுக்கு பகவத் கீதையை பரிசளித்த பிரதமர் மோடி!

வரலாற்றில் இதற்கான உதாரணங்கள்:

1949: ஜோசப் ஸ்டாலின், மாவோ சேதுங்கின் உடல்நிலை தெரிந்துகொள்ள அவரது கழிவுகளை ரகசியமாக சேகரிக்க உத்தரவிட்டதாக வரலாற்றில் கூறப்படுகிறது.

பனிப்போர் காலத்தில்: பிரிட்டிஷ் உளவுத்துறை, சோவியத் வீரர்களின் கழிப்பறை காகிதங்களை கூட பகுப்பாய்வு செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது முதலில் பாரிஸ் மேட்ச் பத்திரிகையில் பத்திரிகையாளர்கள் ரெஜீஸ் ஜெண்டே மற்றும் மிக்காய் ரூபின் ஆகியோரால் விவரிக்கப்பட்டது.

1999 ஆம் ஆண்டு முதல் poop suitcase முறையை பயன்படுத்தும் அதிபர்:

2022ஆம் ஆண்டிலும், புதினின் பாதுகாப்புக் குழு அவரது கழிவுகளை சேகரித்து, பிளாஸ்டிக் பைகளில் மூடி ரஷ்யாவிற்கு திருப்பி எடுத்துச் செல்வதாக பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. அவர் சென்ற நாட்டில் அவை அப்புறப்படுத்தப்படுவதில்லை; சிறப்பு குழுவால் நேரடியாக மாஸ்கோவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

ரஷ்ய அதிபர் புதின் கடந்த 1999 ஆம் ஆண்டு ரஷ்ய அதிபராக பொறுப்பேற்ற போதே இந்த நடவடிக்கையை பின்பற்ற தொடங்கியிருக்கிறார். அவர் எங்கு சென்றாலும் அவரது உடல் நிலை குறித்து எந்த தகவல்களும் வேறு நாடுகளுக்கு கசிந்துவிடக்கூடாது என அவர் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.