Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இண்டிகோ சேவை ரத்து.. கவுண்டரில் ஏறி நின்று வெளிநாட்டு பெண் பயணி வாக்குவாதம்.. வீடியோ!!

Indigo flight cancel: தாங்கள் செல்ல வேண்டிய விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் மாற்று பயண ஏற்பாடுகளை கூட செய்ய முடியாமல் தவித்தனர். அதோடு, பல்வேறு இடங்களிலும் விமானத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் தண்ணீர், உணவின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இண்டிகோ சேவை ரத்து.. கவுண்டரில் ஏறி நின்று வெளிநாட்டு பெண் பயணி வாக்குவாதம்.. வீடியோ!!
வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 06 Dec 2025 14:00 PM IST

மும்பை, டிசம்பர் 06: இண்டிகோ (Indigo) ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவை கடந்த 2 நாட்களாக முடங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சிவில் விமான போக்குவரத்து துறையின் புதிய விதிகளை பின்பற்றி கூடுதல் விமானிகள் மற்றும் விமான பணியாளர்களை நியமிக்காததன் காரணமாக இண்டிகோ நிறுவனம் தற்போது கடும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த விமான சேவை பாதிப்பால் வெளிநாட்டு பயணிகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் மும்பை விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ நிறுவன கவுண்டரில், பொறுமை இழந்து கவுண்டரின் மீது ஏறி நின்று ஆத்திரத்தில் கடுமையாக குரல் எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : கொடூர விபத்து…காரில் 8 மணி நேரம் உயிருக்கு போராடி பலியான தம்பதி!

புதிய விமான விதிகளால் வந்த சிக்கல்:

முன்னதாக, விமான விபத்துக்கள் உள்ளிட்ட சிக்கல்களை எதிர்க்கொள்ள டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து துறை சில புதிய விதிகளை அறிமுகம் செய்தது. அதன்படி, ஒரு விமானி ஒரு நாளுக்கு 8 மணி நேரம் மட்டுமே பறக்க வேண்டும், வாரத்தில் 48 மணி நேரம் கட்டாய விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட சில முக்கிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த விதிகளை பின்பற்றாத விமான நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்றும், அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

புதிய விதிகளை அமல்படுத்திய மற்ற நிறுவனங்கள்:

இந்த விதிகளை பின்பற்ற 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், ஏர் இந்தியா, ஆகாசா, ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் கூடுதல் விமானிகள் மற்றும் பணியாளர்களை நியமிக்க தொடங்கியது. ஆனால், இண்டிகோ நிறுவனம் விதிகளின் படி, கூடுதல் விமானிகளையோ, பணியாட்களையோ நியமிக்கவில்லை. இந்நிலையில், கடந்த நம்பவர் மாதம் இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்தன. எப்படியோ ஒரு மாதத்தை சிறு சிறு பிரச்சனைகளுடன் இண்டிகோ நிறுவனம் சமாளித்து வந்தது. ஆனால், கடந்த டிச.1ம் தேதி முதல் கடும் சவால்களை எதிர்கொள்ள தொடங்கியது. அதாவது, புதிய விதிகளின் படி, போதிய விமானிகள், விமான பணியாளர்கள் இல்லாததால் விமனாங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பயணிகள் கடும் அவதி:

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் என இந்தியாவின் பல விமான நிலையங்களில் இண்டிகோ விமானங்கள் மட்டும் திடீரென ரத்து செய்யப்படுவதும், தாமதம் ஆவதுமாக இருந்து வந்தது. இவ்வாறு திடீரென விமானம் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் மாற்று பயண ஏற்பாடுகளை கூட செய்ய முடியாமல் தவித்தனர். அதோடு, பல்வேறு இடங்களிலும் விமானத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் தண்ணீர், உணவின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இது பலருக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அப்படி, கோபமடைந்த பயணிகள் பலர் இண்டிகோ நிறுவனத்திற்கு எதிராக விமான நிலையத்திலேயே, சண்டையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

கவுண்டரில் ஏறி நின்று பெண் வாக்குவாதம்:

அவ்வாறு மும்பை விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண்மணி ஒருவர், தனது பொறுமையை இழந்து இண்டிகோ நிறுவனத்தின் டிக்கெட் கவுண்டர் மீது ஏறி நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அந்தப் பெண் வெறும் கால்களுடன் கவுண்டரின் ஜன்னல்களைப் பிடித்துக்கொண்டு உள்ளே குதிக்க முற்படுகிறார்.

தனது உடைமைகள் அனைத்தும் பெட்டியில் பேக் செய்து வைத்திருப்பதால், கையில் மாற்று உடை கூட இல்லாமல், எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வருவதாக அவர் அங்கிருந்தவர்களிடம் கூறி குமுறினார். மேலும், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் சிக்கித் தவிப்பதால், தனக்கு உணவு வழங்கும்படி கேட்டுக்கொண்டார். கவுண்டரில் இருந்த ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்த முயற்சிப்பதும், கவுண்டர் மேலிருந்து கீழே இறங்குமாறும் வலியுறுத்தி வந்தனர். அவருக்கு பின்னால் அங்கு நீண்ட வரிசையில் பயணிகள் தாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பது தெரியாத தவிப்பில் காத்துக்கொண்டிருந்தனர்.