Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்த மாநிலத்தில் 7,400 பேருக்கு ஹெச்ஐவி தொற்றா? 400 குழந்தைகளா?

7400 people infected HIV reported: இந்தியாவில் இந்த மாநிலத்தில் உள்ள மாவட்டத்தில் 400 குழந்தைகள் உள்பட 7400 பேர் ஹெச்ஐவி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அது எந்த மாநிலம், எதற்காக இவ்வளவு நோய் தொற்று ஏற்பட்டது.

இந்த மாநிலத்தில் 7,400 பேருக்கு ஹெச்ஐவி தொற்றா? 400 குழந்தைகளா?
ஹெச்வி தொற்றால் 7400 பேர் பாதிப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 12 Dec 2025 11:17 AM IST

பீகார் மாநிலம், இஹார் சீதாமர்ஹி மாவட்டத்தில் பலரிடம் ஹெச். ஐ. வி. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 7, 400 பேர் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. இதில், 400 பேர் குழந்தைகள் என்ற மேலும் அதிர்ச்சி அளிக்கும் தகவலும் கிடைத்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட மருத்துவமனையில் உள்ள ஆன்டி ரெட்ரோ வைரஸ் தெரபி மையத்தின் (ART) புள்ளி விவரங்களின் அடிப்படையில், ஹெச். ஐ. வி. நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 400 குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களிடமிருந்து வைரஸ் பரவி இருப்பதாக கூறப்படுகிறது. பெற்றோர்களில் ஒருவர் அல்லது இருவரும் ஹெச். ஐ. வி.யால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இந்த நோய் பெரும்பாலும் ஏற்படுகிறது.

ஹெச்ஐவி தொடர்பான போதிய விழிப்புணர்வு

இதனால், பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த தொற்று ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக ஆன்டி ரெட்ரோ வைரஸ் தெரபி மையத்தின் மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், பீகாரில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. ஹெச்ஐவி நோய் தொற்று மற்றும் அதன் பரவல் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாதது ஹெச்ஐவி பரவலுக்கு அடிப்படை காரணம் ஆகும்.

மேலும் படிக்க: ஊட்டியில் உறைபனி.. 3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் வெப்பநிலை.. வானிலை ரிப்போர்ட்..

ஒவ்வொரு மாதமும் 60 நோயாளிகள் வரை பதிவு

ஹெச்ஐவி தொடர்பாக போதிய விழிப்புணர்வு பிரசாரங்கள் இல்லாததால் மக்களிடம் விழிப்புணர்வு குறித்த தகவல் முழுமையாக சென்று சேரவில்லை. இந்த ஏஆர்டி மையத்தில் ஒவ்வொரு மாதமும் 40 முதல் 60 புதிய நோயாளிகள் பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, சுமார் 5 ஆயிரம் ஹெச்ஐவி நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

மற்ற மாவட்டங்களில் அதிக அளவு பாதிப்பு

பீகாரில் பதிவான ஹெச்ஐவி வழக்குகள் குறித்து சீதாமர்ஹியின் உதவி சிவில் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஹெச்ஐவி நோடல் அதிகாரி ஜே. ஜாவேத் கூறுகையில், சீதாமர்ஹி மாவட்டத்தை விட மற்ற மாவட்டங்களில் அதிக அளவிலான ஹெச்ஐவி நோயாளிகள் உள்ளனர். இந்த நோய் இருமல் மூலம் பரவும் நோய் அல்ல. ரத்த மாற்றம் அல்லது ஒருவருக்கு செலுத்திய ஊசியை மற்றவருக்கு செலுத்துவதன் மூலம் இந்த நோய் பரவுகிறது. பெட்டியா, மோதிஹாரி, முசார்பூர் ஆகிய மாவட்டங்கள் எங்களை விட மோசமான சூழ்நிலையில் உள்ளன.

ஹெச்ஐவி நோய் தொற்றால் 6,707 நோயாளிகள்

தினமும் சிகிச்சைக்காக சுமார் 250 முதல் 300 ஹெச்ஐவி நோயாளிகள் எங்களிடம் வந்து செல்கின்றனர். தற்போது, சிகிச்சையில் உள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 6,707- ஆக உள்ளது. உள்ளூர் கிராமங்களில் ஹெச்ஐவி பரிசோதனை முகாம்களை நடத்த சுகாதார குழுக்கள் தயாராகி வருகின்றன என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: தவறி விழுந்து பலியான கர்ப்பிணி பெண்.. 10 நாட்களுக்கு பின் வெளிவந்த உண்மை.. யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம்..