Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

100 நாள் வேலை திட்டத்தில் புதிய மாற்றம்…என்ன அது!

Pujya Bapu Gramin Rojgar Yojana: இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

100 நாள் வேலை திட்டத்தில் புதிய மாற்றம்…என்ன அது!
100 நாள் வேலை திட்டத்தில் புதிய மாற்றம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 13 Dec 2025 10:46 AM IST

இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராம பகுதிகளில் வேலையில்லாமல் இருக்கும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டம் கடந்த 2006- ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் கிராம பகுதியில் உள்ள ஏழை, எளியோருக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 154 மில்லியன் மக்கள், அதாவது 15.40 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்கு 100 நாள் வேலையுடன் சேர்த்து அதற்கான ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது.

100 நாள் வேலை திட்டத்தில் 3- இல் ஒருவர் பெண்கள்

இதில், பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை தூர் வாருவது, சாலைகள் விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கு உதவி செய்வது என்பன உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த திட்டத்தில் 3- இல் ஒருவர் பெண்களாக உள்ளனர்.

இரு முறை பெயர் மாற்றம் பெற்ற 100 நாள் வேலை திட்டம்

இந்தத் திட்டத்துக்கு முதலில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என பெயரிடப்பட்டது. பின்னர் கடந்த 2009- ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த திட்டத்துக்கான பெயர் மீண்டும் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அண்மையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க: டெல்டா, தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!

100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம்

இந்த கூட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றுவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, இந்த 100 நாள் வேலை திட்டத்துக்கான பெயர் “பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா” என பெயர் மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

125 – ஆக அதிகரிக்கப்படும் வேலை நாள்கள்

இந்தத் திட்டத்தின் பெயர் மாற்றத்துக்கான மசோதா தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் 100 நாள் வேலையை 125 நாள்களாக அதிகரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ. 1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதற்கான பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

மேலும் படிக்க: தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: பணப்பட்டுவாடாவை கண்காணிக்கும் வருமான வரித்துறை