கரூர் கூட்டநெரிசல் வழக்கு: சந்தேகத்தில் உச்சநீதிமன்றம்.. விஜய்யிடம் சிபிஐ விசாரிக்க திட்டம்!!
karur stampede case: கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. தொடர்ந்து, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு விசாரணையை கண்காணிக்கும் என்றும் குறிப்பிட்டது. இந்நிலையில், ஒரு நபர் ஆணையம், சிறப்பு புலனாய்வு குழுவை ரத்து செய்து தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சிபிஐ விசாரித்து வருகிறது. சம்பவ இடத்தில் இருந்த போலீசார், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், கூட்டத்தில் இருந்த பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் என ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், தற்போது தவெக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கரூருக்கு விஜய்யை அழைத்தால் பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதால், சென்னை சிபிஐ அலுவலகத்தில் விசாரிக்க திட்டமிட்டு வருதவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி, விஜய்க்கு சிபிஐ விரைவில் சம்மன் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இச்சம்மபம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏதோ தவறு நடக்கிறது என குறிப்பிட்டு வழக்கில் உயர்நீதிமன்ற பதிவாளரையும் ஒரு தரப்பாக சேர்த்து பதிளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
மேலும் படிக்க: தொகுதி பங்கீடா? எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!
ஒரு நபர் ஆணையத்தை ரத்து செய்த உச்சநீதிமன்றம்:
கரூர் மாவட்டத்தில் உள்ள வேலசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, அங்கு ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதேசமயம், உயர்நீதிமன்றம் தரப்பில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரு நபர் ஆணையம், உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவை ரத்து செய்து உத்தரவிட்டது.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவு:
மேலும், கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. தொடர்ந்து, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு விசாரணையை கண்காணிக்கும் என்றும் குறிப்பிட்டது. இந்நிலையில், ஒரு நபர் ஆணையம், சிறப்பு புலனாய்வு குழுவை ரத்து செய்து தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதித்தட்டார். அதோடு, சிபிஐ விசாரணையில் ஒரு நபர் ஆணையம் தலையிடாது என்றும் கூறினார்.
உயர்நீதிமன்றம் மீது சந்தேகம் எழுப்பிய உச்சநீதிமன்றம்:
இதனை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், இவ்வழக்கு நியாமாகவும், பாரபட்சமின்றியும் இருக்க வேண்டும்எ என விரும்புகிறோம். பொதுக்கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, எப்படி குற்றவியல் ரிட் மனுவாக பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து, சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அனுப்பிய அறிக்கையை நாங்கள் பார்த்தோம். அங்கு எதோ தவறு நடக்கிறது. உயர்நீதமின்றத்தில் நடப்பது எதுவும் சரியாக இல்லை. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரையும் ஒரு தரப்பாக சேர்க்க நோட்டீஸ் பிறப்பிக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: 2026-ல் கைக்கோர்க்கும் பாமக – தவெக? போராட்டத்தில் கலந்துக்கொள்ள நேரில் அழைப்பு..
வழக்கு விசாரணை எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும்:
மேலும், அங்கு பின்பற்றப்படும் விதிமுறைகள் தொடர்பாக நாங்கள் ஆய்வு செய்வோம் எனக் கூறிய நீதிபதிகள், இவ்வழக்கை இறுதி விசாரணக்காக ஒத்திவைத்தனர். அதோடு, ஏற்கெனவே வழங்கிய இடைக்கால உத்தரவில் எந்த மாற்றங்களையும் மேற்கொள்ள முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.