Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

YEAR ENDER 2025: 4- ஆவது பொருளாதார நாடாக உருவெடுத்த இந்தியா…3- ஆவது இடத்துக்கு முன்னேறும் நாள் வெகு தொலைவில் இல்லை!

India Over Takes Japan To Become Largest Economy: உலக அளவில் 4- ஆவது பொருளாதார நாடாக இருந்த ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா அந்த இடத்தை பிடித்துள்ளது. இந்த இடத்தை விட்டு முன்னேறிச் செல்வதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை.

YEAR ENDER 2025: 4- ஆவது பொருளாதார நாடாக உருவெடுத்த இந்தியா…3- ஆவது இடத்துக்கு முன்னேறும் நாள் வெகு தொலைவில் இல்லை!
4- ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 18 Dec 2025 17:53 PM IST

உலக அளவில் இந்தியா பல்வேறு விஷயங்களில் முன் மாதிரியான நாடாக விளங்கி வருகிறது. அதில், குறிப்பிடத்தக்க வகையில் உலகின் 4- ஆவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறி உள்ளது. இது மிகப் பெரிய வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலையில் இருந்தன. இதில், 5- ஆவது இடத்தில் இருந்த இந்தியா 4. 19 ட்ரில்லியன் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (ஜி. டி. பி ) ( ரூ. 356 கோடி ) ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4- ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. நீதி ஆயோக் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ( ஐ. எம். எஃப்) அறிக்கைகளின் அடிப்படையில், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இருப்பதால் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி 3- ஆவது இடத்தை இந்தியா பிடிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

10- ஆவது இடத்தில் இருந்த இந்தியா

இந்த வரிசையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2014- ஆம் ஆண்டு உலக பொருளாதார நாடுகளின் வரிசையில் இந்தியா 10- ஆவது இடத்தில் இருந்தது. கடந்த 2022- ஆம் ஆண்டில் 5- ஆவது இடத்துக்கு முன்னேறியது. தற்போது, 2025- ஆம் ஆண்டில் 4- ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. இந்த முடிவானது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தரவரிசை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: YEAR ENDER 2025: அகமதாபாத் விமான விபத்து…உடல் கருகி உயிரிழந்த 241 பேர்…உயிர் பிழைத்த ஒருவர்!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதம்

இதில், ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4. 744 ட்ரில்லியன் டாலராக அதாவது 403.71 லட்சம் கோடியாக உள்ளது. தேசிய புள்ளிகள் அலுவலகத்தின் புள்ளி விவரங்களின் அடிப்படையில், 2024- 2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருந்தது. 2- ஆவது காலாண்டில் 5.8 சதவீதமாக சரிந்த போது, 3- ஆவது காலாண்டில் 6.2 சதவீதமாக உயர்ந்தது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 ட்ரில்லியன் டாலராக உயர்வு

தற்போது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( ஜி. டி. பி ) 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. முதல் இடத்தில் உள்ள அமெரிக்கா இந்தியாவை விட 8 மடங்கும், சீனா 5 மடங்கும் பெரிய பொருளாதார நாடாக இருப்பதால் அந்த நாடுகளை முந்துவதற்கு இந்தியா இன்னும் வேகமான வளர்ச்சியை பதிவு செய்ய வேண்டி உள்ளது.உலகளாவிய புவி அரசியல் மற்றும் பொருளாதார காரணங்கள், வர்த்தக போட்டிகள் ஆகியவை இதற்கு காரணமாக அமைந்தன. வரும் ஆண்டுகளில் இந்தியா 3- ஆவது மிகப் பெரிய பொருளாதார நாடாக மாறும் என்பதில் ஐயமில்லை… அந்த நாள் வெகு தூரம் இல்லை…

மேலும் படிக்க: Year Ender 2025 : ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ்… ஏஐ மூலம் சுங்க கட்டணம் வசூல் – இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பான திட்டங்கள்