YEAR ENDER 2025: அகமதாபாத் விமான விபத்து…உடல் கருகி உயிரிழந்த 241 பேர்…உயிர் பிழைத்த ஒருவர்!
Ahmedabad Air India 171 Flight Crash: குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த அகமதாபாத் விமான விபத்து நடந்து 6 மாதங்கள் கடந்த நிலையிலும், அதன் தாக்கும் இன்னும் யார் மனதிலும் நீங்காமல் உள்ளது. இந்த விபத்து குறித்து "2025 மீள்பார்வை"யில் பார்க்கலாம்.
குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து, லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானமான போயிங் 171- என்ற விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்தப் பகுதியில் இருந்த மருத்துவமனை கட்டிட வளாகத்தில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த கொடூர சம்பவத்தில் அந்த விமானத்தில் பயணித்த பயணிகள், விமான ஊழியர்கள், மருத்துவர்கள் என 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து குடியுரிமை பெற்ற விஸ்வாஸ் குமார் என்ற நபர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருந்தார். இந்த விபத்தின் போது விமானம் தீ பற்றி எரிந்ததால் விமானத்தில் இருந்த பயணிகளும் மருத்துவமனை வளாகத்தில் இருந்த மருத்துவர்களும் உடல் கருகி உயிரிழந்தனர். அந்த இடமும் கருப்பு நிறமாக மாறியது. இதே போல, இந்த சம்பவமும் அனைவரது மனதிலும் கருப்பு நாளாகவும், கருப்பு நிறமாகவும் பதிந்தது.
விமான விபத்து நிகழ்ந்து 6 மாதங்கள் ஆகும் நிலை
இந்தச் சம்பவம் நடைபெற்று 6 மாதங்கள் ஆகும் நிலையில், அந்த சுவடும் தற்போது வரை மாறாமல் உள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், விமானத்துக்கு செல்லக்கூடிய எரிவாயு சுவிட்ச் கட் ஆப் ஆனதாகவும், விமானத்தின் இரு எஞ்சின்களும் பழுதானதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு விமானிகளும் பேசிக்கொண்டது விமானத்தில் இருந்த கருப்பு பெட்டியின் மூலம் தெரிய வந்தது.
மேலும் படிக்க: சிறந்த மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்கும் செயற்கைக்கோள்.. இஸ்ரோவின் அடுத்த மைல்கல்..




மறு பிறவியாக அமைந்த 10 நிமிட தாமதம்
யாரும் எதிர்பாராத இந்த விபத்து தற்போது அல்ல. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அனைவரது மனங்களில் இருந்தும், இந்த நிகழ்வை நேரில் பார்த்தவர்களின் கண்களில் இருந்தும் நீங்காது. இந்த விமானத்தில் பயணிக்க இருந்த பூமி செளஹான் என்ற பெண் போக்குவரத்து நெரிசலில் சிக்கி 10 நிமிட வித்தியாசத்தில் விமானத்தை தவிர விட்டார். இதனால், அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருந்தனர். இது அவருக்கு மறு பிறவியாக இருந்தது.
உயிரிழந்த 241 பேரின் குடும்பத்தினருக்கும்…
இதே போல, உயிரிழந்த 241 பயணிகளும் இந்த விமானத்தை தவற விட்டிருக்கலாமே என்ற எண்ணம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மனதில் எழாமல் இருந்திருக்காது. இந்த விபத்தில் இரு விமானிகளுக்கும் முக்கிய பங்கு உண்டு என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனால், இந்த விமானத்தை இயக்கிய இரு விமானங்களும் மிகுந்த திறமைசாலிகள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏனென்றால், கேப்டன் சுமித் சபர்வால் 8,200 மணி நேரமும், துணை விமானி கிளைவ் சுந்தர் 1,100 மணி நேரமும் விமானம் ஓட்டிய அனுபவம் பெற்றவர்களாவர்.
காலத்தின் கையில் விமான விபத்து விசாரணை
இவ்வளவு அனுபவம் வாய்ந்த விமானிகள் இயக்கிய ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 8 நிமிடங்களில் எப்படி விபத்தில் சிக்கியது என்பது தொடர்பான விசாரணை தற்போதும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இந்த விபத்தில் பயங்கரவாத சதிச் செயல் இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும், இந்த விபத்தில் மனித தவறே காரணம் என பெரும்பாலும் குற்றஞ்சாட்டப்படுகிறது. என்னதான் விசாரணை மேற்கொள்ளப்பட்டாலும், இதற்கான தீர்வை காலம் தான் சொல்லும்…
மேலும் படிக்க: சிட்னி தாக்குதல்…யூத நிறுவனங்களுக்கு இந்தியா உயர்மட்ட எச்சரிக்கை!