Census 2027: இரண்டு கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு.. மத்திய அரசு அறிவிப்பு
Govt Releases Census 2027 Details: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பை "இந்தியாவிற்கு ஒரு முக்கியமான பயிற்சி என்று அவர் கூறியுள்ளார்.
டெல்லி, டிசம்பர் 12: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 2027-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி இரண்டு கட்டங்களாக நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் 2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி சாதிவாரியாக நடைபெற உள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு உலகிலேயே மிகப்பெரிய நிர்வாக நடவடிக்கை என்றும், இந்த பணிகளுக்காக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : தமிழ்நாட்டில் 70 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம்? நீக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? வெளியான அறிவிப்பு
2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு:
நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011ல் நடத்தப்பட்டது, கொரோனா தொற்றுநோய் பரவலைத் தொடர்ந்து 2021 நடக்க வேண்டிய கணக்கெடுப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027ல் நடைபெறும் என்று அரசு இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. அதோடு, இது, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதல் டிஜிட்டல் முறை மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.
எதிர்கட்சிகளின் தொடர் கோரிக்கை:
இடஒதுக்கீடு, நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்கு மக்கள் தொகை எண்ணிக்கை மிகவும் முக்கியம். இதன் காரணமாக 2022 மற்றும் 2023 காலகட்டங்களில் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. எனினும், அப்போது மத்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில், தற்போது இதற்கான கோரிக்கைகள் வலுத்த நிலையில், 2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பீகார் தேர்தல் ஒரு கண்ணோட்டம்…எதிர்கட்சி அந்தஸ்தை பெறாத கட்சி…தனிப்பெரும்பான்மை பெற்ற தேஜகூட்டணி!
இரண்டு கட்டங்களாக கணக்கெடுப்பு:
அதன்படி, 2026- ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை வீடுகளின் பட்டியல், வீடுகளின் வரைபடம், இதைத் தொடர்ந்து, 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது, மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் மாயமாக்கப்பட உள்ளதால் முன்பு இருந்த சிக்கல்கள் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு அதற்கான முடிவுகளை வெளியிடுவதற்கு எடுத்துக் கொள்ளும் காலமும் குறைய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.