Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

YEAR ENDER 2025: வக்ஃபு சட்ட திருத்த மசோதா கடந்த வந்த பாதை!

Waqf Act Amendment Bill Passed: மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா கடந்து வந்த பாதையும், அதில் ஏற்பட்ட இடையூறுகளும், இறுதியாக அது சட்டமாக்கப்பட்டது எப்படி என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

YEAR ENDER 2025: வக்ஃபு சட்ட திருத்த மசோதா கடந்த வந்த பாதை!
வக்ஃப் சட்ட திருத்த மசோதா கடந்து வந்த பாதை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 16 Dec 2025 17:48 PM IST

இந்தியாவில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்தது முதல் இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதில், கடந்த 1995- ஆம் ஆண்டு வக்ஃபு சட்டத்தில் 40- க்கும் மேற்பட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மசோதா தான் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா ஆகும். இந்த சட்ட திருத்தத்தின் மூலம் வக்ஃபு சொத்துக்களின் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை, பொறுப்பு கூறுதல், நவீன மயமாக்குதல் மற்றும் இஸ்லாமிய பெண்களுக்கு பிரதிநிதித்துவம் உள்ளிட்டவற்றை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும் இன்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இந்த சட்ட திருத்தமானது பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, தற்போது சட்டமாக்கப்பட்டுள்ளது.

வக்ஃபு சட்ட திருத்த மசோதா

ஆனால், இந்த சட்ட திருத்த மசோதாவில் சில பிரிவுகளுக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த திருத்தத்தில் வக்ஃபு சொத்துகள் மீது மத்திய அரசின் கட்டுப்பாடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில வக்ஃபு வாரியங்களில் குறைந்தபட்சம் 2 இஸ்லாமிய பெண்கள் இருப்பதை உறுதி செய்கிறது.

மேலும் படிக்க: சிட்னி தாக்குதல்…யூத நிறுவனங்களுக்கு இந்தியா உயர்மட்ட எச்சரிக்கை!

வக்ஃபு சொத்துக்களின் உரிமை

வக்ஃபு சொத்துக்களின் பதிவு, அந்த சொத்துக்கள் மீதான தணிக்கை, கணக்குகள் ஆகியவற்றில் வெளிப்படுத்தன்மையே உறுதி செய்வதற்கான விதிகளை இந்த சீர்திருத்தம் உருவாக்கி உள்ளது. ஒரு சொத்தானது வக்ஃபு சொந்தமானதா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் வக்ஃபு தீர்ப்பாயத்திற்கு இருக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியருக்கும் இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வக்ஃபு சட்டப் பிரிவு 40 நீக்கம்

இதில், குறிப்பாக பழைய சட்டத்தின் படி வக்ஃபு சட்டத்தில் உள்ள பிரிவு 40 கீழ் தவறாக பயன்படுத்தப்பட்ட அதிகாரங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த சட்ட திருத்த மசோதாவானது கடந்த 2024- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு இஸ்லாமியர்கள் தங்களது சமுதாயத்துக்கு எதிரானது என்றும், வக்ஃபு சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் இந்த திருத்தம் மேற்கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

சட்டமாக உருமாறிய வக்ஃபு திருத்த மசோதா

மேலும், பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இதற்கு இஸ்லாமியர்களின் நலனுக்காகவே இந்த திருத்தம் மேற்கொள்வதாக மத்திய பாஜக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது. மேலும், இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நீதிமன்றங்களில் 100- க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் வக்ஃபு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக உருமாறியது.

மேலும் படிக்க: EAR ENDER 2025: அகமதாபாத் விமான விபத்து…உடல் கருகி உயிரிழந்த 241 பேர்…உயிர் பிழைத்த ஒருவர்!