AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முட்டையில் புற்று நோய் பாதிப்பு பொருள்…அசைவ பிரியர்கள் அதிர்ச்சி…உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!

Chicken Eggs Nitrofuran Finding: இந்தியாவில் கோழி முட்டைகளில் புற்று நோய் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பொருள் சேர்க்கப்பட்டுள்ளதாக பரவிய வீடியோவை தொடர்ந்து, இந்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதனால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் .

முட்டையில் புற்று நோய் பாதிப்பு பொருள்…அசைவ பிரியர்கள் அதிர்ச்சி…உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை!
கோழி முட்டையில் புற்று நோய் பொருள்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 16 Dec 2025 10:38 AM IST

இந்தியாவில் புற்றுநோயுடன் தொடர்புடைய தடை செய்யப்பட்ட ஒரு பொருளின் சேர்க்கை முட்டையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வந்தது. அந்த வீடியோவில் எக்கோஸில் உணவு உற்பத்தி செய்யும் விலங்குகளுக்கு தடை செய்யப்பட்ட ஒரு நோய் எதிர்ப்பு சக்தி (ஆன்டி-பயாட்டிக்) நைட்ரோஃபியூரான்கள் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ அசைவ விரும்பிகள் மற்றும் பொது மக்கள் இடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால், இந்த மருந்த செலுத்தப்பட்ட கோழிகளில் இருந்து கிடைக்கும் முட்டையை சாப்பிடும் நபர்களுக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்படக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. இந்த வீடியோ பூதாகரமானதை தொடர்ந்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஒரு பிரபலமான நிறுவனத்தின் முட்டை மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

முட்டைகள் சேகரிக்கும் பணியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

மேலும், அந்த நிறுவனத்தின் முட்டைகள் மற்றும் அந்த நிறுவனம் சாராத முட்டைகளின் மாதிரிகளை சேகரிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, நாடு முழுவதும் சேகரிக்கப்படும் கோழி முட்டைகள் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள 10 ஆய்வகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளன. இது தொடர்பாக எகோஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புற்று நோய் பாதிப்பு உடைய பொருள் முட்டையில் இருப்பதாக வெளியான வீடியோவின் அடிப்படையில், சோதனைக்காக சேகரிக்கப்பட்ட முட்டைகளை ஆய்வு செய்து அதற்கான ஆய்வக அறிக்கைகளை தங்கள் வலைதளத்தில் பகிர்ந்து கொள்ள உள்ளது.

மேலும் படிக்க: டெல்லியில் காற்று மாசுடன் நிலவும் கடும் குளிர்.. மோசமான வானிலை காரணமக 228 விமானங்கள் ரத்து!

டிசம்பர் 25- இல் ஆய்வக அறிக்கைகள் வெளியீடு

இது தொடர்பாக இந்த நிறுவனம் பொது மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உறுதி அளித்துள்ளது. எக்கோஸ் முட்டை மாதிரிகளின் சமீபத்திய ஆய்வக அறிக்கைகள் வரும் டிசம்பர் 25ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த ஆய்வக அறிக்கைகளை www.eggoz.com- என்ற இணையதளத்திலும் பொதுமக்களின் பார்வைக்காக பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. எக்கோஸில் எங்கள் நுகர்வோரின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை அனைத்தையும் குறிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் நைட்ரோஃபியூரான்கள் தடை

உங்கள் பொறுமைக்கும், உண்மைகளை தெளிவுபடுத்த எங்களுக்கு வாய்ப்பளித்ததற்கும் நன்றி. பண்ணைகள் மற்றும் செயல்முறைகள் முழுவதும் மிக உயர்ந்த தரங்களை நாங்கள் தொடர்ந்து பதிவேற்றுவோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு உற்பத்தி செய்யும் விலங்குகளில் நைட்ரோஃபியூரான்களை பயன்படுத்துவதை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: டெல்லி – ஆக்ரா விரைவுச் சாலையில் நடந்த கோர விபத்து.. 4 பேருந்துகள் தீப்பிடித்து எரிந்ததில் பலரும் உடல் கருகி உயிரிழப்பு..

Follow Us