தலைமை ஆசிரியரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய 9 ஆம் வகுப்பு மாணவன்.. பகீர் சம்பவம்!
9th Grade Student Gun Threatens Headmaster | ஒடிசாவில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் முறையாக பள்ளிக்கு வராததால் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர் ஒருவரை அழைத்து கண்டித்துள்ளார். அப்போது அந்த மாணவர் பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து தலைமை ஆசிரியரை மிரட்டியுள்ளார்.
கேந்திரபாரா, டிசம்பர் 14 : ஒடிசாவின் (Odisha) கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கொருவா என்ற பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், 14 வயது சிறுவன் ஒருவர் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஆனால், அந்த மாணவர் சரியாக படிப்பதில்லை என்றும், முறையாக பள்ளிக்கு வரிவதில்லை என்றும் அவர் மீது தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்துள்ளன. அதுமட்டுமன்றி, அந்த மாணவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும்போது இடையூறு செய்து வந்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு வந்துள்ளது.
மாணவரை அழைத்து கண்டித்த தலைமை ஆசிரியர்
அந்த மாணவர் மீது இவ்வாறு தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வந்துக்கொண்டு இருந்த நிலையில், அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவரை அழைத்து கண்டித்துள்ளார். அப்போது அந்த மாணவர் தான் பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தலைமை ஆசிரியரின் முகத்திற்கு முன்பு நீட்டி சுட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் தலைமை ஆசிரியர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
இதையும் படிங்க : பெண்ணை கட்டி போட்டு நகை மற்றும் பணம் கொள்ளை.. பெங்களூரில் பகீர் சம்பவம்!




தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்
மாணவர் தலைமை ஆசிரியரை துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காவல் நிலையத்தை தொடர்ப்புக்கொண்டு பள்ளி நிர்வாகம் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்துள்ளது. அதன் அடிப்படையில், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க : பூட்டிய வீட்டிற்குள் சடலமாக தூக்கில் தொங்கிய தாய் மற்றும் மகன்கள்.. பகீர் சம்பவம்!
துப்பாக்கி எங்கிருந்து வந்தது என விசாரணை மேற்கொள்ளும் போலீசார்
இந்த விவகாரம் குறித்து கூறியுள்ள போலீசார், சிறுவன் நாட்டு துப்பாக்கியை வைத்து தலைமை ஆசிரியரை மிரட்டியுள்ளார். அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். சிறுவனின் கைக்கு எப்படி துப்பாக்கி வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.