Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டெல்லியில் காற்று மாசுடன் நிலவும் கடும் குளிர்.. மோசமான வானிலை காரணமக 228 விமானங்கள் ரத்து!

Delhi Air Pollution and Fog | டெல்லியில் ஏற்கனவே கடுமையான காற்று மாசு நிலவி வருவதால் விமான போக்குவரத்துக்கு கடும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக அங்கு சுமார் 228 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டெல்லியில் காற்று மாசுடன் நிலவும் கடும் குளிர்.. மோசமான வானிலை காரணமக 228 விமானங்கள் ரத்து!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 16 Dec 2025 08:35 AM IST

புதுடெல்லி, டிசம்பர் 16 : தலைநகர் டெல்லியில் (Delhi) கடும் குளிர், பனி மற்றும் காற்று மாசு அனைத்தும் சேர்ந்து அசாதாரனமான சூழலை உருவாகி வருகிறது. டெல்லியில் ஏற்கனவே நிலவும் மிக கடுமையான காற்று மாசு காரணமாக அங்கு பல்வேறு சிக்கல்கள் மற்றும் சவால்கள் உருவாகி வருகின்றன. பனி மற்றும் குளிர் அதிகரித்து வருதால் நாளுக்கு நாள் நிலை மோசமடைந்து வருகிறது. இந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக அங்கு சுமார் 228 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காற்று மாசுக்கு நடுவே வாட்டும் கடும் பனி

டெல்லி ஏற்கனவே கடும் காற்று மாசால் கடும் அவதி அடைந்து வருகிறது. இந்த நிலையில், அங்கு கடும் பனி மற்றும் குளிரும் இணைந்து வாட்டி வதைத்து வருகிறது. டெல்லியின் பல்வேறு பகுதிகள் பனிப்போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது. இதனால், பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். சாலைகளும் கடும் பனி மூட்டத்தால் மூடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : சிட்னி தாக்குதல்…யூத நிறுவனங்களுக்கு இந்தியா உயர்மட்ட எச்சரிக்கை!

மோசமான வானிலை காரணமாக 228 விமானங்கள் ரத்து

டெல்லியின் வானத்தில் பனி அடர்த்து காணப்படுகிறது, இதன் காரணமாக வானிலை தெளிவற்றதாக உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் இருந்து புறப்பட இருந்த 131 விமானங்கள் மற்றும், டெல்லிக்கு வர இருந்த 97 விமானங்கள் என மொத்தமாக சுமார் 228 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : கொரோனா தடுப்பூசிக்கும், இளம் வயதினரின் திடீர் மரணங்களுக்கும் தொடர்பா?.. எய்ம்ஸ் அறிக்கையில் வெளியான முக்கிய தகவல்கள்!

இந்த ரத்து செய்யப்பட்ட விமானங்களில் 40 ஏர் இந்தியா விமானங்கள் ஆகும். இது தவிர டெல்லியில் தரை இறங்குவதாக இருந்த 5 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.