Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பள்ளியில் மயங்கி விழுந்த 10 ஆம் வகுப்பு மாணவி… சில நொடிகளில் பிரிந்த உயிர் – வைரலாகும் வீடியோ

Tragic Incident at School: ஆந்திரா மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது மாணவி ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.

பள்ளியில் மயங்கி விழுந்த 10 ஆம் வகுப்பு மாணவி… சில நொடிகளில் பிரிந்த உயிர் – வைரலாகும் வீடியோ
மயங்கி விழுந்து மாணவி மரணம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 14 Dec 2025 15:23 PM IST

பொதுத்தேர்வுகளுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், அதற்காக மாணவர்கள் (Student) தயாராகி வருகின்றனர். மறுபுறம், ஆசிரியர்களும் தங்கள் பாடத்திட்டங்களை  விரைந்து முடிப்பதில் மும்முரமாக உள்ளனர். இந்த நிலையில், ஒரு தனியார் பள்ளியில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. காலையில்,  ஆசிரியர் (Teacher) பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, அனைத்து மாணவர்களும் வகுப்பில் அமர்ந்து அதனை கவனித்து வந்தனர். இந்த நிலையில் ஒரு மாணவி திடீரென கீழே விழுந்து மயக்கமடைந்திருக்கிறா். இந்த நிலையில் சில நொடிகளில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது. இந்த சம்பவம் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பள்ளியில் மாணவி விழுந்து மரணம்

பள்ளி பொதுத் தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், அதற்காக மாணவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மறுபுறம், ஆசிரியர்களும் பாடத்திட்டங்களை முடிப்பதில் மும்முரமாக உள்ளனர். இந்த நிலையில் தான், ஆந்திரா மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் ராமச்சந்திரபுரம் என்ற ஊரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது.  அம்மாவட்டத்தில் பசலபுடி கிராமத்தைச் சேர்ந்த நல்லமில்லிலி ஸ்ரீ  என்ற 14 வயது மாணவி, ராமச்சந்திரபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இதையும் படிக்க : திருவனந்தபுரம் மாநகராட்சி இடைத்தேர்தல்.. கேரள அரசியலில் ஒரு தீர்க்கமான தருணம் – பிரதமர் மோடி..

வைரலாகும் வீடியோ

 

கடந்த டிசம்பர் 13, 2025 சனிக்கிழமை காலையில், காலையில் பள்ளியில் பாடம் கேட்டுக்கொண்டிருந்தபோது அவர் கீழே விழுந்ததாகத் தெரிகிறது. பள்ளி நிர்வாகம் சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. இருப்பினும், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். பக்கவாதத்தால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ராமச்சந்திரபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வைரலாகும் வீடியோவில் நெட்டிசன்கள் அதிர்ச்சி

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு விரைந்தனர்.  ஆந்திர பிரதேசம் மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 13, 2025 அன்று சனிக்கிழமை இந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது. இந்த நிலையில் பள்ளி வகுப்பறையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : பூட்டிய வீட்டிற்குள் சடலமாக தூக்கில் தொங்கிய தாய் மற்றும் மகன்கள்.. பகீர் சம்பவம்!

கடந்த சில ஆண்டுகளாக மிக இளம் வயதினர் இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. அதற்கு வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் முக்கிய காரணமாக மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக உடல் உழைப்பு வெகுவாக குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. முன்பு பள்ளி முடிந்து வந்த பின்பு மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் ஓடியாடி விளையாடுவதை வழக்கமாக இருந்தது. இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் அந்த இடத்தை நிரப்பி விட்டன.