Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

SIR பணிச்சுமை.. உத்தர பிரதேசத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி ஆசிரியர் தற்கொலை!

Teacher Killed Himself Over SIR Pressure | உத்தர பிரதேசத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், பணி சுமை தாங்காமல் அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

SIR பணிச்சுமை.. உத்தர பிரதேசத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி ஆசிரியர் தற்கொலை!
தற்கொலை செய்துக்கொண்ட ஆசிரியர்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Dec 2025 08:57 AM IST

லக்னோ, டிசம்பர் 02 : இந்தியாவில் விரைவில் பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளை (SIR – Special Intensive Revision), இந்திய தேர்தல் ஆணையம் (ECI – Election Commission of India) தொடங்கியுள்ளது. இந்த திருத்த பணிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். எஸ்ஐஆர் திருத்த பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதில் மிகுந்த பணிச்சுமை ஏற்படுவதாக கூறி ஊழியர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது மேலும் ஒரு ஊழியர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

எஸ்ஐஆர் பணியால் ஆசிரியர் தற்கொலை

உத்தர பிரதேச மாநிலம், முராதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆசிரியர் சர்வேஷ் சிங். இவர் வாக்காளர் தீவிர திருத்த பணியில் நிலை அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். அதாவது, அக்டோபர் 07, 2025 முதல் அவர் இந்த பணியை செய்து வந்த நிலையில், அவருக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. மேலும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த பச்சிளம் குழந்தையை கடித்துக் கொன்ற சிறுத்தை.. ஷாக் சம்பவம்!

கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட ஆசிரியர்

இந்த நிலையில், வீட்டிற்கு வந்த அவரது மனைவி, அறையின் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது தனது கணவன் தூக்கில் தொங்கிக்கொண்டு இருப்பதை கண்டு அவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்த ஆசிரியரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : காதலனை கொலை செய்த குடும்பம்.. இறுதி சடங்கில் காதலனை திருமணம் செய்துக்கொண்ட இளம் பெண்!

கடிதத்தை கைப்பற்றிய காவல்துறை

தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னதாக சர்வேஷ் சிங் எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், பகல் இரவாக பணியாற்றியபோது வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை உரிய காலக்கெடுக்குள் முடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். அந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.