AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நள்ளிரவில் சீறிப் பாய்ந்து வந்த சொகுசு கார்.. நொடிப்பொழுதில் பறிபோன உயிர்!!

நள்ளிரவு 2.30 மணியளவில் ஆள்நடமாட்டம் குறைவாக இருந்த சாலையில் அதிவேகமாக சொகுசு கார் ஒன்று சென்றுள்ளது. திடீரென சாலையில் குறுக்கே தடுப்பு பலகை வைக்கப்பட்டிருப்பதை கவனித்த ஓட்டுநர், காரை திருப்ப முயற்சித்துள்ளார். எனினும், வந்த வேகத்தில் திருப்ப முடியாததால், அங்கு சாலையோரம் இருந்தவர்கள் மீது கார் மோதியுள்ளது.

நள்ளிரவில் சீறிப் பாய்ந்து வந்த சொகுசு கார்.. நொடிப்பொழுதில் பறிபோன உயிர்!!
விபத்துக்குள்ளான கார்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 30 Nov 2025 15:36 PM IST

டெல்லி, நவம்பர் 30: டெல்லியில் நள்ளிரவில் அதிவேகமாக சீறிப்பாய்ந்து வந்த சொகுசு கார் ஒன்று, சாலையின் ஓரமாக நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் வசந்த் குஞ்ஜ் பகுதியில் உள்ள அம்பியன்ஸ் மால் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நள்ளிரவு 2.30 மணியளவில் அதி வேகமாக வந்த அந்த மெர்சிடீஸ் G63 கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் உள்ள கம்பத்தில் மோதிய வேகத்தில், ஆட்டோ ஸ்டாண்டில் காத்திருந்த மூவர் மீது மோதியுள்ளது.

Also read: நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்திய மணமகன் கைது.. 6 வயது சிறுமி பரிதாப பலி!

விபத்தில் சிக்கிய உணவக ஊழியர்கள்:

தொடர்ந்து, விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு படுகாயமடைந்து கிடந்த மூவரையும், ஆம்பலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதில், 23 வயதான உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தைச் சேர்ந்த ரோஹித் எனும் இளைஞர், மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, 35 மற்றும் 23 வயதுடைய மற்ற இருவர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இந்த மூவரும் அம்பியன்ஸ் மாலில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றித் வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கார் ஓட்டிவந்த நபர் கைது:

இதனிடையே, அந்த சொகுசு காரை ஓட்டிவந்த கரோல் பாக் பகுதியைச் சேர்ந்த 29 வயது சிவம் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து நடந்த சமயத்தில், சிவம் தனது மனைவி மற்றும் பெரியண்ணனுடன் திருமண விழாவுக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அவர்கள் ஓட்டிச்சென்ற G63 சொகுசு கார், சிவத்தின் நண்பர் அபிஷேக்கின் கார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மாற்றுப்பாதை பலகையால் நேர்ந்த விபத்து:

தொடர்ந்து, விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், முதல்கட்ட விசாரணையின் படி, அந்த பகுதியில் சாலையில் வைக்கப்பட்டிருந்த மாற்றுப்பாதை (diversion) பலகை காரணமாக அதிவேகத்தில் சென்ற காரை திருப்ப முயன்றதால், கார் முதலில் கம்பத்தில் மோதியுள்ளது. பின்னர் அருகில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டில் நின்றுக்கொண்டிருந்த மூவர் மீதும் பாய்ந்து மோதியுள்ளது.

Also Read : திருமணத்திற்கு முன்பு விபத்தில் சிக்கிய மணமகள்.. மணமகன் செய்த நெகிழ்ச்சி செயல்!

தொடர்ந்து, காரை ஓட்டிவந்த சிவத்தின் மீது சட்ட நடவடிக்கைகள் கண்டிப்பாக எடுக்கப்படும் என போலீசார் உறுதி தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அதிக வேகம் மற்றும் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளின் ஆபத்தைக் காட்டும் மிகுந்த துயரமான ஒன்று என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

Follow Us