சபரிமலையில் ஏறிய தமிழக பக்தர் மாரடைப்பால் மரணம் – சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
Sabarimala: சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய மலை ஏறிய தமிழகத்தை சேர்ந்த கோவிந்தராஜ் பெருமாள் (67) என்ற பக்தர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 22 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபரிமலை (Sabarimala) ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய மலை ஏறிய தமிழ்நாட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் பெருமாள் என்ற பக்தர் மாரடைப்பால் (Heart Attack) மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 15, 2025 அன்று முதல் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சமபரிமலையில் குவிந்து வருகின்றனர். இதனால் கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்த முடியாமல் கோவில் நிர்வாகம் திணறி வருகிறது.
மாரடைப்பால் தமிழக பக்தர் மரணம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் டிசம்பர் 18, 2025 அன்று தரிசனத்திற்காக மலை ஏறிய தமிழ்நாட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற பக்தர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது வயது 67. இந்த சம்பவம் பக்தர்களிையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் பாதுகாப்பாக அடிவாரத்துக்கு எடுத்து செல்லப்பட்டு, உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு மட்டும் சபரிமலையில் மாரடைப்பால் இதுவரை 22 பக்தர்கள் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : பால் கலப்படத்தை தடுக்க புதிய கொள்கை…தமிழக அரசு அதிரடி!




சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மட்டும் 22 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். குறிப்பாக முதல் வாரத்தில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனயடுத்து ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக சபரிமலை தேவசம்போர்டு குறைத்தது.
மகரவிளக்கு திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் கண்காணிப்பு, மருத்துவ வசதிகள் மற்றும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : நெல்லையில் கோயிலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த கரடி.. கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை!
சபரிமலையில் இந்த ஆண்டு மகர விளக்கு பூஜை காலத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 81 பக்தர்களை கேரளா அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ முகாம்கள் மூலம் காப்பாற்றப்பட்டதாக தகவல் வெளியிட்டுளஅளது. சபரிமலையில் மலையேற்ற பாதையில், 17 மருத்துவ மையங்கள் உட்பட மொத்த 22 அவசர மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த காலக்கட்டத்தில் இதுவரை 103 பேருக்கு மாரைப்பு ஏற்பட்டதாகவும் அதில், 81 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 44 பேருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. மேலும் வலிப்பு ஏற்பட்ட 44 பேருக்கும் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சபரிமைலையை சுற்றியுள்ள மருத்துவமனைகளில் இதுவரை பல்வேறு உடல் நலக்குறைபாடுகளால் 95,385 பேர் சிகிச்சை பெற்றதாகவும் கேரள அரசு தகவல் வெளியிட்டுள்ளது.