Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“கறுப்பாக இருப்பது தவறா?” நிறத்தை காட்டி மனைவியை விரட்டிய கணவன்.. குடும்பமே செய்த கொடுமை!!

கோபி லட்சுமிக்கு ஆதரவாக அவரது உறவினர்களும் போராட்டத்தில் இணைந்தனர். ஆனால், இதனை எதிர்கொள்ளாமல் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கோபிலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், கணவர் உள்ளிட்ட மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“கறுப்பாக இருப்பது தவறா?” நிறத்தை காட்டி மனைவியை விரட்டிய கணவன்.. குடும்பமே செய்த கொடுமை!!
போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள பெண்ணின் குடும்பத்தினர்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 17 Dec 2025 12:10 PM IST

ஆந்திரபிரதேசம், டிசம்பர் 17: திருமண வரன் பார்க்கையில் இன்னும் பல இடங்களில் பெண்ணின் கல்வி, குணநலன் போன்ற அம்சங்களை விட, அவளது நிறம் மற்றும் வரதட்சணை மீதான பார்வையே மேலோங்கிக் காணப்படுகிறது. அந்த வகையில், கறுப்பாக இருந்ததன் காரணமாக ஒரு இளம்பெண் கணவன் மற்றும் மாமியாரால் வீட்டை விட்டு துரத்தப்பட்ட சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலங்களில், இத்தகைய மனப்பான்மையுடன் நடைபெறும் திருமணங்களை பெண்களே முன்வந்து மறுக்கும் போக்கும் கணிசமாக அதிகரித்துள்ளது. இது ஒரு நேர்மறையான சமூக மாற்றத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில், ஆந்திராவில் அவ்வாறு வீட்டை விட்டு துரத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பெண், பணத்திற்காக ஏமாற்றி திருமணம் செய்து, பின்னர் அவர்களைத் துன்புறுத்துபவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றும், தனக்கு நீதி வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு நடந்த சம்பவம் குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க: சென்னை டூ ஆந்திரா வந்தே பாரத் ரயில் சேவை…நிறுத்தம்…கட்டணம் எவ்வளவு!

திருமணமான 3 மாதத்தில் கிளம்பிய பரச்சனை:

ஆந்திரப் பிரதேசத்தின் பால்நாடு மாவட்டத்தைச் சேர்ந்த நடுகட்டா கிராமத்தில் வசித்து வரும் கோபிலட்சுமி என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரராவ் என்பவருக்கும் கடந்த ஜூன் 4-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. செல்வந்தர் குடும்பத்தில் திருமணம் செய்தால் தனது மகள் நல்ல வாழ்க்கை வாழ்வாள் என்று நம்பி, கோபிலட்சுமியின் பெற்றோர் தங்களுக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து திருமணத்தின் போது, 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் ரொக்கத்தை வரதட்சணையாக வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு சில மாதங்கள் அனைத்தும் சீராக இருந்த நிலையில், மூன்று மாதங்கள் கடந்ததும் கோபிலட்சுமியின் வாழ்க்கையில் பிரச்சினைகள் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கறுப்பாக இருந்ததால் வெறுத்த குடும்பம்:

அதாவது, அப்பெண் கறுப்பு நிறமாக இருப்பதை காரணமாகக் காட்டி கணவர் அவளை ஒதுக்கத் தொடங்கியதாகவும், மாமனார் மற்றும் மாமியாரும் இணைந்து மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவரை துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனுடன் கூடுதலாக, மேலும் வரதட்சணை கேட்டு அவரை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த வரதட்சணைக் கொடுமைப் பிரச்சினைகளை தனது பெற்றோரின் கவனத்திற்குக் கோபிலட்சுமி கொண்டு சென்றபோது, ​​அவர்கள் சில பெரியவர்களுடன் வந்து மாமனார் வீட்டில் பேசியதாகவும், ஆனால் அப்பெண்ணின் கணவர், கறுப்பாக இருப்பதால் கோபிலட்சுமி தனக்கு வேண்டாம் என்று கூறியதாகவும் தெரிகிறது.

எங்களை என்ன செய்து விட முடியும் என மிரட்டல்:

ஒரு கட்டத்தில் அப்பெண்ணின் மாமியார், கோபிலட்சுமியை வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது. அதோடு, இதற்காக காவல்துறை அதிகபட்சம் தங்கள் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யும், ஆனால் தங்களுக்கு வலுவான அரசியல் செல்வாக்கு இருப்பதால் பிணையில் வெளியே வந்துவிடுவோம், எனவே வேறு எதுவும் நடக்காது என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, கோபிலட்சுமி தனது கணவரின் வீட்டின் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

தலைமறைவான குடும்பம்:

தொடர்ந்து, கோபி லட்சுமிக்கு ஆதரவாக அவரது உறவினர்களும் போராட்டத்தில் இணைந்தனர். ஆனால், இதனை எதிர்கொள்ளாமல் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கோபிலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், கணவர் உள்ளிட்ட மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: டெல்லியில் காற்று மாசுடன் நிலவும் கடும் குளிர்.. மோசமான வானிலை காரணமக 228 விமானங்கள் ரத்து!

இன்றைய காலத்திலும் திருமணத்தில் வரதட்சணை, தோற்றம், தோல் நிறம் போன்ற காரணிகள் முன்னிலைப் பெறுவது வருத்தமளிக்கும் விஷயமாக உள்ளது. இத்தகைய மனப்பான்மை பெண்ணின் சுயமரியாதையை பாதிப்பதோடு, குடும்ப உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும். திருமணம் என்பது கொடுத்தல் – பெறுதல் வியாபாரம் அல்ல; அது இருவரும் சேர்ந்து வாழ்க்கையை கட்டியெழுப்பும் பயணமாகும்.