Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vitamin Deficiency: உடலில் இந்த வைட்டமின் குறைபாடா…? எச்சரிக்கை! மாரடைப்பு வரலாம்!

Vitamin B12 Deficiency: உங்கள் இதயம் உங்கள் உடலில் மிக முக்கியமான உறுப்பு. சமீப ஆண்டுகாலத்தில் பலரும் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இதய பிரச்சனைகள் காரணமாக உயிரிழப்பு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதன்படி, வைட்டமின் பி12 குறைபாடு போன்றவற்றைப் புறக்கணிப்பது உங்கள் இதய ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

Vitamin Deficiency: உடலில் இந்த வைட்டமின் குறைபாடா…? எச்சரிக்கை! மாரடைப்பு வரலாம்!
இதய ஆரோக்கியம்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Nov 2025 18:54 PM IST

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நாம் பெரும்பாலும் நம் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படுவது கிடையாது. அதிலும், குறிப்பாக வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறையும்போது, அதை கண்டுகொள்வது கிடையாது. இதன் காரணமாக, தலையில் தலைவலி முதல் அடி பாதம் வரை வலியை தரும். அதேபோல், வைட்டமின்களில் பல வகை என்றாலும், வைட்டமின் பி12 (Vitamin B12) குறைபாடு உங்கள் இதயத்திற்கு ஆபத்தானது (Heart Health) என்பது உங்களுக்குத் தெரியுமா? சமீபத்திய ஆய்வுகளின்படி, வைட்டமின் பி12 குறைபாடு இதய நோய் அபாயத்தை பன்மடங்கு அதிகரிக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா? இந்த 5 அறிகுறிகள் பதில் சொல்லும்!

வைட்டமின் பி12 உடலுக்கு ஏன் முக்கியம்..?

வைட்டமின் பி12 நமது உடலுக்கு இன்றியமையாத ஒன்றாகும். இது இரத்த சிவப்பணுக்களின் சரியான செயல்பாட்டைப் பராமரிக்க பெரிதும் உதவி செய்யும். அதேநேரத்தில், வைட்டமின் பி12 குறைபாடு உடலில் இதய நோய் உட்பட பல சிக்கலான செயல்முறைகளைப் பாதிக்கிறது. வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம். இந்த இணைப்பு முக்கியமாக அமினோ அமில ஹோமோசிஸ்டீனின் அளவுகளுடன் தொடர்புடையது. உடலில் வைட்டமின் பி12 இன் குறைந்த அளவு ஹோமோசிஸ்டீன் அளவை அதிகரிக்கிறது. இது தமனிகளில் வீக்கம் மற்றும் இரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கிறது.

ஹோமோசிஸ்டீன் என்பது அதிக அளவில் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு பொருளாகும். இந்த நிலை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. வைட்டமின்கள் பி12, பி6 மற்றும் ஃபோலிக் அமிலம் ஹோமோசிஸ்டீனை சமநிலைப்படுத்தி அதன் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன.

வைட்டமின் பி12 குறைபாட்டின்போது உடலில் என்ன அறிகுறிகள் தோன்றும்..?

  • சோர்வு
  • பலவீனம்
  • மூச்சுத் திணறல்
  • தலைச்சுற்றல்
  • மஞ்சள் தோல்
  • வாய் புண்கள்
  • கூச்ச உணர்வு
  • உணர்வின்மை

உங்கள் இதயம் உங்கள் உடலில் மிக முக்கியமான உறுப்பு. சமீப ஆண்டுகாலத்தில் பலரும் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இதய பிரச்சனைகள் காரணமாக உயிரிழப்பு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதன்படி, வைட்டமின் பி12 குறைபாடு போன்றவற்றைப் புறக்கணிப்பது உங்கள் இதய ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

வைட்டமின் பி12 பிரச்சனையை சரிசெய்வது எப்படி..?

உங்களுக்கு அசைவ உணவுகள் பிடிக்கும் என்றால் வைட்டமின் பி12 பிரச்சனையை ஈடுசெய்ய மட்டன், மீன் மற்றும் சிக்கன் உள்ளிட்டவற்றை தாராளமாக எடுத்து கொள்ளலாம். தொடர்ந்து, முட்டை, பால் பொருட்கள், தானியங்கள் போன்றவற்றை சாப்பிட்டு ஈடுசெய்யலாம்.

ALSO READ: மழைக்காலத்தில் மிளகின் அதீத பயன்கள்.. சளி, காய்ச்சலை விரட்டியடிக்கும்..!

இதுமட்டுமின்றி, உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு உங்கள் வைட்டமின் பி12-ஐ தொடர்ந்து பரிசோதித்து கொள்ளுங்கள். மேலும், சீரான உணவை உண்ணுதல், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்த்தல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுதல், மன அழுத்தமில்லாமல் வாழுதல் போன்றவையும் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.