கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவின் ரூ.10.5 கோடி வீடு…அசர வைக்கும் பல்வேறு வசதிகள்!
Cricketer Prithvi Shaw Mumbai House: கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவின் ரூ. 10 .5 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட வீட்டில் உள்ள பல்வேறு அம்சங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவை என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்திய கிரிக்கெட் வீரரான பிருத்வி ஷா மும்பையில் மிகவும் விரும்பப்படும் சுற்றுப்புறங்களில் ஒன்றான பாந்த்ரா மேற்கு பகுதியில் ஒரு பிரமாண்டமான அடுக்குமாடி குடியிருப்பில் 81 ஆரியட்டின் 8- ஆவது மாடியில் அவரது வீடு அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு தோராயமாக 2,209 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. மேலும், 1,654 சதுர அடி அளவிலான கூடுதல் மொட்டை மாடியும் அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் 4 படுக்கை அறைகள் மற்றும் 3 பிரத்யேக கார் பார்க்கிங் வசதிகள் உள்ளன. இந்த வீட்டுக்காக கிரிக்கெட் வீரரான பிருத்வி ஷா சுமார் ரூ. 10.5 கோடி மற்றும் முத்திரை வரியாக கூடுதலாக ரூ. 52. 50 லட்சத்தை செலுத்தியுள்ளார்.
நவீன தொழில் நுட்பத்துடன்…
தாமஸ் பரம்பில் கட்டிட கலைஞர்களால் வெட்டர்னஸ் இன்டீரியர் உடன் இணைந்து கட்டப்பட்ட இந்த வீடானது ஒவ்வொரு மூலையிலும் அரவணைப்புடன் இணைக்கப்பட்ட நவீன தொழில் நுட்பத்தை எடுத்துக் காண்பிக்கிறது. இந்த வீட்டில் தரையில் இருந்து சுவர் மற்றும் ஜன்னல் ஆகியவற்றில் கடல் போல காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: கணவன் – மனைவி சண்டை.. 7 வயது மகளை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த தாய்!




வெள்ளை நிற சோபாக்கள் உள்ளிட்டவை
வீட்டில் வெள்ளை நிற சோபாக்கள், மென்மையான அமைப்பு மற்றும் அடக்கமான நவீன தளபாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மரம் மற்றும் பளிங்கு கற்களால் பல்வேறு நுணுக்கமன வேலை பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிருத்வி ஷாவின் வீட்டில் மிகவும் பேசப்படும் இடமாக அமைந்திருப்பது மொட்டைமாடி ஆகும். அங்கு, மொட்டை மாடி நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மொட்டை மாடியில் இருந்து அரபிக் கடலின் பரந்த பகுதிகளை கண்கூறாக பார்க்கலாம்.
பொழுது போக்கு துறை நடிகர்கள்
இந்த வீட்டில் உள்ள 4 படுக்கை அறைகளும் ஒரே மாதிரியாக கட்டப்பட்டுள்ளது. ஒழுங்கற்ற, நடுநிலை மற்றும் ஆழ்ந்த தனிப்பட்ட மேன்மையான விளக்குகள், வசதியான அமைப்புகள், பெரிய ஜன்னல்கள் உள்ளிட்டவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. 81 ஆரியட் என்பது பொழுது போக்கு துறையைச் சேர்ந்த நடிகர்களான சோனாஷி சின்ஹா மற்றும் கரண் குந்த்ரா ஆகியோர் இந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
ரூ. 16 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட குடியிருப்பு
இதே போல, மலைக்கா அரோரா மற்றும் அர்ஜுன் கபூர் ஆகியோரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆனால், கடந்த 2022- ஆம் ஆண்டு தங்கள் அடுக்குமாடி குடியிருப்பை சுமார் ரூ. 16 கோடிக்கு விற்பனை செய்தனர். கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவின் இந்த பிரம்மாண்டமான வீட்டில் உள்ள பல்வேறு பிரம்மாண்டங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: டெல்லியை கலங்கடிக்கும் காற்று மாசு.. புது ரூல்ஸை கொண்டு வந்த டெல்லி அரசு!