டீ கடையில் தொடரும் பண்டமாற்று முறை…இரு தேங்காய்க்கு உணவு பொருள்…எங்கு தெரியுமா!
Kerala Tea Stall Offer Barter System: கேரளாவில் ஒரு கிராமத்தில் உள்ள டீ கடையில் தேங்காய்க்கு உணவு மற்றும் தேநீர் வழங்படுகிறது. அதாவது, இந்த காலத்திலும் பண்டமாற்று முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கேரளாவில் உள்ள ஒரு டீ கடையில் தேனீருக்கு பணம் வாங்குவதற்கு பதிலாக இந்த காலத்திலும் பண்டமாற்று முறை நடைபெற்று வருவதாக சமூக வலை தளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், இந்த டீ கடைக்கு அருகில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயம் பார்த்து வரும் விவசாயிகள் டீ அருந்துவதற்காக வருவார்கள். அவர்களிடம் அந்த டீ கடையின் உரிமயாளர் தேநீருக்கு பணம் வாங்குவதற்கு பதிலாக தேங்காயை வாங்கி விட்டு அதற்கு ஈடாக தேநீர் அளித்து வருகிறார். இதே போல, உணவு, பரோட்டா, புழுக்கு ஆகியவற்றுக்கும் பணம் வாங்குவதற்கு பதிலாக பண்டமாற்று முறையில் தேங்காய் பெறப்படுகிறது. இந்த பண்டமாற்று முறை நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது.
தேங்காய்களுக்கு இணையாக உணவு
இது தொடர்பாக, அந்த டீ கடையின் உரிமையாளர் கூறுகையில், வயலில் வேலை பா்த்து விட்டு தேனீர் மற்றும் உணவு அருந்துவதற்காக எனது கடைக்கு வரும் விவசாயிகள் எந்த நேரமும் கைகளில் பணம் வைத்திருக்கமாட்டார்கள். எனவே, அந்த சூழ்நிலை அறிந்து, விவசாயிகளிடம் இருந்து வயலில் விளைந்த தேங்காய்களை பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாக தேனீர் மற்றும் உணவுகள் வழங்கி வருகிறேன்.
மேலும் படிக்க: மாரடைப்பால் துடிதுடித்த கணவன்.. நடுரோட்டில் உதவிக்கேட்டு பரிதவித்த மனைவி.. மரித்த மனிதநேயம்..




இரு தேங்காய்க்கு எவ்வளவு உணவு அளிப்பு
விவசாயிடம் இருந்து பெறப்படும் இரண்டு தேங்காய்களுக்கு ஒரு பரோட்டா, புழுக்கு மற்றும் டீ வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், உணவு பொருட்களுக்கு பணமும் பெறப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் இந்த தேங்காய்கள் விற்பனைக்காகவோ அல்லது உணவுக்காகவோ பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையானது விவசாயிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது.
சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
இது தொடர்பான வீடியோ (@mishti.and.meat) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிஜிட்டல் படைப்பாளர் ஷ்ரமோனா போடார் பகிர்ந்துள்ளார்.2025- ஆம் ஆண்டில் டிஜிட்டல் பண பரிமாற்றம், கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட பல்வேறு வகையான டிஜிட்டல் முறையில் பணம் பரிமாற்றம் செய்வதற்கான நடைமுறைகள் வந்துவிட்டன. சாலையோரங்களில் இருக்கும் சாதாரண கடைகள் முதல் மிகப்பெரிய நட்சத்திர விடுதிகள் வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைமுறைக்கு வந்துவிட்டது.
மக்களின் கவனத்தை ஈர்த்த பண்டமாற்று முறை
ஆனால், கேரளாவில் இயற்கை சார்ந்த ஒரு கிராமத்தில் இந்த காலத்திலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பெரிதாக உபயோகப்படுத்தப்படாமல், பழைய காலத்தில் இருந்தது போல பண்டமாற்று முறை செயல்பாட்டில் இருப்பது அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க: டிஜிட்டல் கைது…பெண் விரிவுரையாளருக்கு செக்…பறிபோன ரூ.2 கோடி!