Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டிஜிட்டல் கைது…பெண் விரிவுரையாளருக்கு செக்…பறிபோன ரூ.2 கோடி!

Digital Fraud Arrested: பெங்களூரில் கல்லூரி பெண் விரிவுரையாளரிடம் நூதன முறையில் டிஜிட்டல் கைது மோசடி நடைபெற்றுள்ளது. இதில், காவல் துறை அதிகாரிகள் போல பேசி, ரூ. 2 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிஜிட்டல் கைது…பெண் விரிவுரையாளருக்கு செக்…பறிபோன ரூ.2 கோடி!
ரூ. 2 கோடி டிஜிட்டல் கைது மோசடி
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 17 Dec 2025 10:36 AM IST

பெங்களூரைச் சேர்ந்தவர் பபிதா தாஸ். இவர், அங்குள்ள கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மகனுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில், பபிதா தாஸின் செல்போனுக்கு கடந்த ஜூன் மாதம் கூரியர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது. அதில், பேசிய நபர் உங்களது ஆதார் எண்ணுடன் தொடர்புடைய சந்தேகத்துக்கிடமான ஒரு பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, அந்த அழைப்பு மும்பை காவல்துறை அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், பேசிய போலீசார் உங்கள் பெயர் மற்றும் ஆதார் எண்ணுடன் மர்ம பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பான விசாரணை முடியும் வரை வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது.

வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக…

மேலும், இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக பணம் தர வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும், விரிவுரையாளர் பபிதா தாஸிடம் தங்களது செல்போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளனர். இதற்கு ஒத்துழைக்கவில்லை எனில், உனது மகன் பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், அச்சமடைந்த அந்த விரிவுரையாளர் பபிதா தாஸ் அந்த நபர்கள் கூறிய படி செல்போனில் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்.

மேலும் படிக்க: ரூ.1 கோடி காப்பீட்டு தொகை…வங்கியை நம்ப வைக்க கொடூர நாடகம்…ஊழியருக்கு போலீசார் காப்பு!

வீட்டு மனைகளை விற்ற பெண்

இதைத் தொடர்ந்து, மாலூரில் உள்ள 2 வீட்டு மனைகளை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்தார். இதே போல, விக்னன் நகர் பிளாட்டையும் விற்பனை செய்துள்ளார். இதில், கிடைத்த பணத்தை செல்போனில் போலீசார் போல பேசிய நபர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார். அப்போது, அந்த நபர்கள் மேலும் பணம் வேண்டும் என்று மிரட்டியதை அடுத்து, வங்கியில் கடன் பெற்று அந்த பணத்தையும் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ரூ.2 கோடி டிஜிட்டல் கைது மோசடி

அதன்படி, மும்பை போலீசார் கூறியதை போல, அவர்களுக்கு பபிதா தாஸ் சுமார் ரூ. 2 கோடி பணத்தை அந்த நபர்களுக்கு வங்கி மூலம் அனுப்பி வைத்துள்ளார். பின்னர், இது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகுமாறு கூறிவிட்டு அந்த நபர்கள் அழைப்பை துண்டித்துள்ளனர். இதன் பின்னரே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விரிவுரையாளர் பபிதா தாஸ், இது தொடர்பாக வைட் பீல்டு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், டிஜிட்டல் கைது மோசடி குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: மாரடைப்பால் துடிதுடித்த கணவன்.. நடுரோட்டில் உதவிக்கேட்டு பரிதவித்த மனைவி.. மரித்த மனிதநேயம்..