Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. காதலன் உட்பட 3 பேர் கைது.. பகீர் சம்பவம்!

Young Woman Betrayed By Her Boyfriend | பெங்களூரை சேர்ந்த இளம் பெண் தனது கல்லூரியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த இளைஞர் அந்த பெண்ணை நண்பர்களுடன் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. காதலன் உட்பட 3 பேர் கைது.. பகீர் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 19 Dec 2025 07:26 AM IST

பெங்களூரு, டிசம்பர் 19 : கர்நாடகா (Karnataka) மாநிலம், மகதி நகர் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இவருக்கு தான் படிக்கும் அதே கல்லூரியை சேர்ந்த விகாஸ் என்ற மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே காதலாக மாறியுள்ளது. காதலிக்க தொடங்கியதும் காதலர்கள் அடிக்கடி வெளியே செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், விகாஸ் அந்த இளம் பெண்ணை தனது நண்பர் பிரசாந்த் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தான் அந்த இளம் பெண்ணுக்கு மிகவும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றுள்ளது.

நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய மூன்று பேர்

இளம் பெண்ணை தனது நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் சென்ற விகாஸ், அங்கு அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். அவ்வாறு அவர்கள் நெருக்கமாக இருப்பதை விகாஸின் மற்றொரு நண்பரான சேத்தன் என்பர் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார். பிறகு அந்த வீடியோவை வைத்து இளம் பெண்ணின் காதலன் விகாஸ் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் என மூன்று பேரும் இணைந்து அந்த இளம் பெண்ணை மிரட்டியுள்ளனர்.

இதையும் படிங்க : இனி மணிக்கு 80 கி.மீ வேகத்தில் சுங்கச்சாவடிகளை கடக்கலாம்.. விரைவில் வரப்போகும் அசத்தல் அம்சம்!

பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்

வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்கள் தாங்கள் அழைக்கும்போதெல்லாம் வரவேண்டும் என கூறி, மூவரும் இணைந்து இளம் பெண்ணை பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்து இரண்டு மாதங்களாக அந்த மூன்று இளைஞர்களும் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளனர். இதனால் அந்த இளம் பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

இதையும் படிங்க : டெல்லியை கலங்கடிக்கும் காற்று மாசு.. புது ரூல்ஸை கொண்டு வந்த டெல்லி அரசு!

மூன்று பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை

இரண்டு மாதங்களாக துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்த இளம் பெண் தைரியமாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றிய விகாஸ் மற்றும் அவரது இரண்டு நண்பர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.