ஓடும் ரயிலில் இருந்து விழுந்த புதுமண தம்பதியினர் பலியான சோகம்.. பரபரப்பு வீடியோ!!
couple fall to death from moving train: இந்த துயரச் சம்பவத்தைச் சார்ந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ரயில் பெட்டியில் தம்பதியினர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், பவானியை கணவர் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதுமாக இருக்கிறார்,
தெலங்கானா, டிசம்பர் 21: தெலங்கானாவில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்து புதுமண தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலையா, விபத்தா என்ற கோணத்தில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திரா மாநிலம் பார்வதி புரம் மன்யம் மாவட்டம் ராவுபள்ளியை சேர்ந்தவர் சிம்மாசலம் (25). இவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு ரசாயன நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவருக்கும் அதே மாவட்டத்தை சேர்ந்த பவானி (19) என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இருவரும் தெலுங்கானா மாநிலம் ஜகத்கிரிகுட்டா பகுதியிலுள்ள காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தனர்.
இதையும் படிங்க : ரயில் பயணிகளே உஷார்…செல்போனில் இ-டிக்கெட்டுக்கு நோ…இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு!
உறவினர்கள் வீட்டிற்கு சென்ற போது சோகம்:
இந்த நிலையில், விஜயவாடாவில் உள்ள உறவினர்களின் வீட்டிற்கு செல்ல சிம்மாசலம் – பவானி தம்பதியினர் மசூலிபட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில், செக்கந்தராபாத் நிலையத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு புறப்பட்டனர். ரயில் யாதாத்ரி புவனகிரி மாவட்டம் வங்கபள்ளி அருகே சென்றபோது, திடீரென இருவரும் ரயிலில் இருந்து கீழே விழுந்தனர். இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் படிக்கட்டு அருகே நின்ற தம்பதி:
இதனிடையே, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், யாதகிரிகுட்டா மண்டலத்தில் உள்ள வங்கபள்ளி ரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது, அந்தத் தம்பதியினர் ரயிலின் படிகட்டு அருகே நின்றுகொண்டிருந்ததாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்ததாகவும் தெரிகிறது. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலையில் ரயில் தண்டவாளப் பராமரிப்புப் பணியாளர்கள் தண்டவாளத்தின் அருகே இருவரின் சடலங்களைக் கண்டபோது, இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அவர்கள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
வைரலாகும் வீடியோ:
రైలు నుంచి పడి నవ దంపతులు మృతిచెందిన ఘటనలో ట్విస్ట్
మృతికి ముందు రైలులో గొడవ పడ్డ దంపతులు
యాదాద్రి భువనగిరి జిల్లా వంగపల్లి – ఆలేరు రైలుమార్గంలో కింద పడి మృతి చెందిన దంపతులు
అయితే, ఈ ఘటనకు ముందు రైలులో గొడవ పడ్డ దంపతులు
దీంతో భర్తతో గొడవ పడి క్షణికావేశంలో ముందుగా రన్నింగ్… https://t.co/2LvgY9SzG6 pic.twitter.com/fp3st5HCZp
— Telugu Scribe (@TeluguScribe) December 20, 2025
இந்தச் சம்பவத்தைச் சார்ந்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரயில் பெட்டியில் தம்பதியினர் வாக்குவாதத்தில் ஈடுபடுவது, பின்னர் கோபத்தில் பவானி ரயிலில் இருந்து குதிப்பது, அவரை காப்பாற்ற சிம்மாசலமும் குதித்துவிடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க : இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. காதலன் உட்பட 3 பேர் கைது.. பகீர் சம்பவம்!
விபத்தா? தற்கொலையா?
ரயில்வே போலீசார், ரயிலில் பயணிக்கும் போது ஏற்பட்ட குடும்ப தகராறின் பின்னணியில் தற்கொலையா? அல்லது தவறி விழுந்த விபத்தா? என்பதைக் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். விசாரணை முடிவில் உண்மை வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.