Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாமாவின் கொலைக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு பழி தீர்த்த சிறுவன்.. பகீர் சம்பவம்!

Boy Killed A Man For Revenge For His Uncle's Murder | உத்தர பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர், 49 வயது நபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் காவல் நிலையத்தில் சரணடைந்த அவர், 18 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட மாமாவின் கொலைக்கு பழி வங்கியதாக கூறியுள்ளார்.

மாமாவின் கொலைக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு பழி தீர்த்த சிறுவன்.. பகீர் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Dec 2025 19:58 PM IST

லக்னோ, டிசம்பர் 21 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், காசியாபாத் மாவட்டம், சராய் பஸ்தி பகுதியை சேர்ந்தவர் இம்ரான். 49 வயதாகும் இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஒரு இளைஞரை கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் 2007 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். சிறை தண்டனை முடிவடைந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மாமாவின் கொலைக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு பழி தீர்த்த சிறுவன்

கொலை வழக்கில் இருந்து விடுதலையாகி சிறையில் இருந்து வெளியே வந்த இம்ரான், சராய் பஸ்தி பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், இம்ரானை நேற்று (டிசம்பர் 20, 2025) சிறுவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். இம்ரான் தனது நண்பர்களுடன் சைக்கிள் கடையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த நிலையில், அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அந்த சிறுவன் இத்தகைய கொடூர செயலை செய்துள்ளார்.

இதையும் படிங்க : ஓடும் ரயிலில் இருந்து விழுந்த புதுமண தம்பதியினர் பலியான சோகம்.. பரபரப்பு வீடியோ!

கொலை குறித்து பகீர் வாக்குமூலம் கொடுத்த சிறுவன்

இம்ரானை சுட்டு கொலை செய்த அந்த சிறுவன் உடனடியாக அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அப்போது இம்ரானை தான் தான் சுட்டு கொலை செய்ததாக அவர் கூறியுள்ளார். கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விளக்கம் கேட்ட நிலையில், அவர் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ரூ.10-க்காக முதியவரை குத்தி கொலை செய்த சிறுவன்.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

சிறுவன் தனது வாக்குமூலத்தில் தனது மாமாவை 2007 ஆம் ஆண்டு இம்ரான் கொலை செய்ததால் 18 ஆண்டுகளுக்கு பிறகு அவரை சுட்டுக் கொலை செய்ததாக கூறியுள்ளார். தனது மாமாவை கொலை செய்த நபரை 18 ஆண்டுகள் கழித்து சிறுவன் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.