பழைய வாகனங்களுக்கு E20 பெட்ரோல் பாதுகாப்பானதா? – கமல்ஹாசனின் கேள்விக்கு நிதின் கட்காரி விளக்கம்
Kamal Haasan : நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத் தொடரில், எரிபொருள் மாற்றம் மற்றும் அணு மின் திட்டங்கள் தொடர்பாக அவர் இரண்டு முக்கியமான கேள்விகளை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் முன்வைத்துள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
புதுடெல்லி, டிசம்பர் 19: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் (Kamal Haasan), மாநிலங்களவையில் தனது முதல் கேள்வியை எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் டிசம்பர் 19, 2025 அன்று நடைபெற்ற குளிர்கால கூட்டத் தொடரில், எரிபொருள் மாற்றம் மற்றும் அணு மின் திட்டங்கள் தொடர்பாக அவர் இரண்டு முக்கியமான கேள்விகளை முன்வைத்துள்ளார். அதற்கு மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி (Nitin Gadkari) விளக்கமளித்துள்ளார். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
பழைய வாகனங்களுக்கு E20 பெட்ரோல் பாதுகாப்பானதா?
நாடாளுமன்றத்தில் மக்கள் நீதி மய்ய கட்சியின் எம்பியான கமல்ஹாசன் தனது முதல் கேள்வியை முன்வைத்தார். அதில், 20 சதவிகித எத்தனால் கலந்த பெட்ரோல் எனப்படும் E20 எரிபொருள் வானத்தின் மைலேஞ் மற்றும் எஞ்சின் பாகங்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளனவா என கேள்வி எழுப்பினார்.




இதையும் படிக்க : மாணவர்களுக்கான விலையில்லா லேப்டாப்பில் இவ்வளவு வசதியா.. உதயநிதி ஸ்டாலின் கொடுத்த அப்டேட்!!
மேலும் எத்தனால் கலப்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்படாத பழைய வாகனங்களுக்கு E20 பாதுகாப்பானதா? ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்த E10 பெட்ரோல் நிறுத்தப்பட்டது ஏன்? என்றும் மீண்டும் அதை மக்களுக்கு ஒரு விருப்பமாக கொண்டுவரும் திட்டம் இருக்கிறதா என்றும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியிரு்தார்.
E20 எரிபொருள் தொடர்பாக கேள்வி எழுப்பிய கமல்ஹாசன்
For India, long-term energy security is a strategic national priority.
In my Unstarred Question in the Rajya Sabha, I sought clarity on the roadmap to scale nuclear capacity to 100 GW by 2047, timelines for thorium-based reactors, and community engagement around projects like… pic.twitter.com/M5H3tV5W7N
— Kamal Haasan (@ikamalhaasan) December 19, 2025
மேலும், E20 பயன்பாட்டால் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டால் கேரண்டி, காப்பீடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டுதல்கள் உள்ளனவா? எத்தனால் விலைகளில் உள்ள ஏற்ற இறக்கங்கள், எரிபொருள் விலையில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது தொடர்பான கேள்விகளையும் அவர் முன்வைத்தார்.
நிதின் கட்கரி அளித்த விளக்கம்
இந்த கேள்விகளுக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் சியாம் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் விரிவான கள ஆய்வுகள் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : பால் கலப்படத்தை தடுக்க புதிய கொள்கை…தமிழக அரசு அதிரடி!
இந்த ஆய்வுகளின் அடிப்படையில், E20 பெட்ரோல் பழைய வாகனங்களையும் சேர்த்து எந்த முக்கியமான எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்றும், வாகனங்களில் செயல்பாடு, ஸ்டார்ட் ஆகும் திறன் போன்ற செயல்திறன்களில் பெரிய சிக்கல்கள் கண்டறியப்படவில்லை என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மைலேஜ் மாற்றங்கள் எரிபொருள் மட்டுமல்லாமல், ஓட்டுநரின் பழக்கம், வாகன பராமரிப்பு மற்றும் வாகனத்தின் நிலை போன்ற பல காரணங்களால் ஏற்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.