Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உ.பியில் கணவனை கொலை செய்து கிரைண்டரில் உடல் பாகங்களை அரைத்த மனைவி.. வெளியான பகீர் தகவல்..

UP Crime: உத்திர பிரதேசத்தில் காதலனுடன் இணைந்து கணவனை கொலை செய்து உடல் பாகங்களை கிரைண்டரில் அரைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் கொடுத்த பின் மனைவி காதலன் மற்றும் சில நண்பர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்,

உ.பியில் கணவனை கொலை செய்து கிரைண்டரில் உடல் பாகங்களை அரைத்த மனைவி.. வெளியான பகீர் தகவல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 22 Dec 2025 18:36 PM IST

உத்திர பிரதேசம், டிசம்பர் 22, 2025: உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில், திருமணத்திற்கு மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்து, உடலை கிரைண்டரில் அரைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் அக்ஷய். இவருக்கு வயது 36. இவரது மனைவியின் பெயர் ரூபி; அவருக்கு வயது 28. மனைவி ரூபிக்கு, காசியாபாத் பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞனுடன் தொடர்பு ஏற்பட்டது. அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இந்த நிலையில், அவர்களின் பழக்கவழக்கங்கள் குறித்து அக்கம் பக்கத்தில் அடிக்கடி விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனை அறிந்த கணவர் அக்ஷய், மனைவி ரூபியை கண்காணிக்கத் தொடங்கியுள்ளார். ஒரு நாள், வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு அக்ஷய் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டுள்ளார். கணவர் வேலைக்கு சென்றுவிட்டதாக நினைத்த ரூபி, தனது ஆண் நண்பரை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

மேலும் படிக்க: கிராமப்புற மேம்பாட்டுக்கு படிக்கல்லான ஜல் ஜீவன் திட்டம்!

கணவனிடம் சிக்கிய மனைவி:

அப்போது இருவரும் தனிமையில் இருந்ததை அக்ஷய் பார்த்துள்ளார். இதனால் கோபமடைந்த அக்ஷய், மனைவி ரூபியை கடுமையாக கண்டித்து அங்கிருந்து வெளியேறினார். ஆனால் ரூபி தொடர்ந்து தனது ஆண் நண்பருடன் அவ்வப்போது தனிமையில் சந்தித்து, திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபட்டுள்ளார். இதனால் அக்ஷய் மற்றும் ரூபி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. தனது இந்த உறவுக்கு தடையாக இருந்த கணவனை எப்படியாவது தீர்த்துக் கட்ட வேண்டும் என ரூபி திட்டமிட்டுள்ளார். இதற்கு அவரது காதலனும் உடந்தையாக இருந்துள்ளார்.

கூட்டாக சேர்ந்து கணவனை கொலை செய்து கிரைண்டரில் அரைத்த சம்பவம்:

ரூபி, அவரது காதலன் மற்றும் மேலும் சில நண்பர்கள் இணைந்து அக்ஷயை கொலை செய்துள்ளனர். இந்த கொலையை மறைப்பதற்காக, அக்ஷயின் உடல் பாகங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டியுள்ளனர். ஒரு சில உடல் பாகங்களை மிக்ஸி மற்றும் கிரைண்டரை பயன்படுத்தி அரைத்துள்ளனர். பின்னர், இந்த உடல் பாகங்களை அனைத்தையும் தனித்தனியாக பொட்டலங்களாக கட்டி, பல்வேறு பகுதிகளில் வீசி சென்றுள்ளனர்.

மேலும் படிக்க: உத்தரகாண்டில் இனி அனைத்து அரசு பள்ளிகளில் பகவத் கீதா கட்டாயம்.. அரசு உத்தரவு!

அக்ஷய் காணவில்லை என உறவினர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளத் தொடங்கினர். அப்போது ரூபியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், காவல்துறையினர் ரூபியிடம் பல்வேறு கோணங்களில் விசாரிக்கத் தொடங்கினர்.

போலீஸ் விசாரணையில் சிக்கிய மனைவி:

இந்த விசாரணையின் போது, ரூபி வாக்குமூலம் அளித்து, தான் அக்ஷயை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து, ரூபி, அவரது காதலன் மற்றும் இந்த கொலையில் ஈடுபட்ட மேலும் சிலர் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.