உத்தரகாண்டில் இனி அனைத்து அரசு பள்ளிகளில் பகவத் கீதா கட்டாயம்.. அரசு உத்தரவு!
Bhagavat Gita is Mandatory In All Government Schools | உத்தரகாண்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பகவத் கீதை கட்டாயம் என்று அந்த மாநிலத்தின் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஸ்லோகங்களை தேர்வு செய்து சொல்ல வேண்டும் என்று அங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட், டிசம்பர் 22 : உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகலும் பகவத் கீதையின் வாசககங்களை வாசிப்பதை கட்டாயமாக்கி அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி மானவர்களிடையே ஒழுக்கம் மற்றும் தலைமை பண்புகளை வளர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது என்று அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், உத்தரகாண்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு குறித்து விரிவாக பார்க்கலாம்.
உத்தரகாண்ட் பள்ளிகளில் பகவத் கீதா கட்டாயம் – முதலமைச்சர்
இது குறித்து கூறியுள்ள உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, சுமார் 17,000 அரசு பள்ளிகளின் பாட திட்டத்தில் பகவத் கீதை மற்றும் ராமாயணம் சேர்க்குமாறு NCERT-யிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இது செயல்படுத்தப்படும் வரை, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகலும் தினசரி காலை வழிபாட்டின்போது பகவத் கீதை மற்றும் ராமாயணத்தின் வசனங்கள் சேர்க்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ரயில் பயணிகளுக்கு ஷாக்.. டிசம்பர் 26 ஆம் தேதி முதல் உயரப்போகும் டிக்கெட் விலை
தினமும் பகவத் கீதை ஸ்லோகம் வாசிக்கப்பட வேண்டும்
இந்த புதிய உத்தரவின் படி உத்தரகாண்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை வழிபாட்டு கூட்டத்தின்போது ஒரு பகவத் கீதை ஸ்லோகம் வாசிக்கப்பட வேண்டும். ஸ்லோகத்தை வாசிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பொருள் மற்றும் அறிவியல் ரீதியான தொடர்பு குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கம் வேண்டும். அதுமட்டுமன்றி, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஸ்லோகம் தேர்வு செய்யப்பட்டு, அது பள்ளி அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்தப்ப வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : ChatGPT பயன்படுத்த வேண்டாம் என ஊழியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.. ஷாக் தகவல்
இவ்வாறு ஒவ்வொரு வாரமும் தேர்வு செய்யப்படும் பகவத் கீதை ஸ்லோகங்கள் குறித்து வகுப்பறையில் விவாதிக்கப்பட வேண்டும். அதுமட்டுமன்றி, அது தொடர்பாக மாணவர்களின் கருத்துக்கள் சேகரிக்கப்படும். இது மாணவர்களிடம் புரிதல் மற்றும் ஈடுபாட்டை ஆழப்படுத்த உதவும் என அந்த மாநில அரசு விளக்கமளித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.