இளம் பெண்ணை இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று பாலியல் சீண்டல்.. அராஜகத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள்!
Young Woman Chased By Three Men In Scooter | பெங்களூரில் உள்ள சில்க் போர்டு சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண்ணை மூன்று இளைஞர்கள் துரத்திச் சென்றுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
பெங்களூரு, டிசம்பர் 28 : கர்நாடகா (Karnataka) மாநிலம், பெங்களூரில் (Bengaluru) உள்ள சில்க் போர்டு சாலை வழியாக இளம் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டு இருந்துள்ளார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் அந்த இளம் பெண்ணை துரத்திச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பின்னால் வந்த காரில் இருந்தவர் பதிவு செய்த வீடியோ
இரவு 10 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த இளம் பெண்ணை, மூன்று இளைஞர்கள் துரத்திச் செல்லும் சம்பவத்தை அதே சாலையில் சென்ற காரில் பயணம் செய்த நபர் வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் பயணம் செய்கின்றனர். அவர்கள் தலை கவசம் உள்ளிட்ட எந்த சாலை பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றாமல் வாகனம் ஓட்டிச் செல்கின்றனர். இந்த வீடியோவை அந்த காரின் உரிமையாளர் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : முட்டையில் கேன்சர் ஏற்படுத்தும் நச்சு?.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கர்நாடகா அரசு!
இணையத்தில் வைரலாகி வரும் அதிர்ச்சி வீடியோ
Saw a girl being harassed by a group of guys for several kms on a main road, & this was before 10. I took a video as evidence and intervened in they immediately fled. @BlrCityPolice @blrcitytraffic pic.twitter.com/7cVrINuYug
— Abhinav Vasudevan (@abhyn0w) December 24, 2025
இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த நபர் இரவு 10 மணிக்கு முன்னதாக இந்த இளம் பெண்ணை சில ஆண்கள் இருசக்கர வாகனத்தில் சில கிலோ மீட்டர்கள் தூரம் வரை துரத்திச் சென்றனர். ஆதாரத்திற்காக இந்த சம்பவத்தை நான் வீடியோ பதிவு செய்தேன். அவர்களை பிடிக்கவும் முயற்சி செய்தேன். ஆனால், அவர்கள் அங்கிருந்து உடனடியாக தப்பிச் சென்றுவிட்டனர் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஐடி நிறுவன CEO பிறந்த நாள் கொண்டாட்டம்.. பெண் மேலாளரை திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.. பகீர் சம்பவம்!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அந்த மூன்று இளைஞர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.