Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முட்டையில் கேன்சர் ஏற்படுத்தும் நச்சு?.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கர்நாடகா அரசு!

Is Eggs Contains Cancer Causing Agents | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் முட்டையை அதிகம் சாப்பிடுகின்றனர். இந்த நிலையில், முட்டை சாப்பிடுவதால் புற்றுநோய் உண்டாகும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதற்கு கர்நாடகா அரசு விளக்கமளித்துள்ளது.

முட்டையில் கேன்சர் ஏற்படுத்தும் நச்சு?.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கர்நாடகா அரசு!
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Dec 2025 09:39 AM IST

பெங்களூரு, டிசம்பர் 27 : தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் தங்களது அன்றாட உணவுகளில் முட்டையை அதிகமாக எடுத்துக்கொள்கின்றனர். குறிப்பாக ஜிம் செல்பவர்கள் மற்றும் உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தங்களது புரத தேவைகளுக்காக அதிக அளவு முட்டைகளை எடுத்துக்கொள்கின்றனர். இவ்வாறு புரத சத்தின் முக்கிய ஆதாரமாக முட்டை உள்ள நிலையில், முட்டை குறித்த வதந்தி ஒன்று கடந்த சில நாட்களாக மிக வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.

பெங்களூரு நிறுவனத்தின் முட்டைகளில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள்?

அதாவது, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனத்தின் முட்டைகளில் புற்றுநோயை உண்டாக்கும் நைட்ரோபியூரான் மருந்தின் கூறுகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. இதன் காரணமாக தங்களது அன்றாட வாழ்வில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த முட்டை விவகாரம் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் முட்டைகள் ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதையும் படிங்கா : இன்று முதல் அமலுக்கு வரும் புதிய ரயில் கட்டணம்.. எத்தனை கி.மீக்கு எவ்வளவு ரூபாய் உயர்வு? முழு விவரம்

முட்டைகளை ஆய்வுக்கு அனுப்பிய கர்நாடகா அரசு

அந்த வகையில் கர்நாடகா அரசும் முட்டைகளை ஆய்வுக்கு முடிவு செய்தது. அதன்படி பெங்களூரு, மைசூரு, மண்டியா, சிவமொக்கா, பல்லாரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து முட்டைகள் சேகரிக்கப்பட்டு இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையத்தில் ஆய்வகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆய்வில், அந்த முட்டைகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன நச்சுக்கள் எதுவும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : 10 பேரை பலி கொண்ட கோர விபத்து…சம்பவ இடத்தில் கேட்ட மரண ஓலம்…பேருந்து ஓட்டுநர் பரபரப்பு தகவல்!

முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானது – சுகாதாரத்துறை அமைச்சர்

இது குறித்து கூறியுள்ள கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் குண்டுராவ், கர்நாடகத்தில் முட்டையில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயன நச்சு இருப்பதாக தகவல் பரவியது. இதனால் மக்கள் சற்று அதங்கப்பட்டனர். மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் நாங்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முட்டைகளை கொண்டு வந்து பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தோம். அதன் பரிசோதனை அறிக்கை வந்துள்ளது.

அதன்படி, முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு எதுவும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானது. அதனால் பொதுமக்கள் அச்சமின்று முட்டை சாப்பிடலாம் என்று அவர் கூறியுள்ளார்.