YEAR ENDER 2025: நீண்ட காலம் பதவி வகித்த 2- ஆவது பிரதமர் நரேந்திர மோடி…இந்திரா காந்தியை பின்னுக்கு தள்ளி நேருவின் சாதனையை நோக்கி பயணம்!
Narendra Modi Is The Second Longest Serving PM: இந்தியாவில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர்களில் நரேந்திர மோடி 2- ஆவது இடத்தை பிடித்துள்ளார். 2029 நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றால் ஜவஹர்லால் நேருவின் சாதனையே முறியடித்து முதல் பிரதமராவார்.
இந்தியாவில் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகிய மூவர் மட்டுமே மிக நீண்ட காலம் பிரதமராக இருந்து வந்தனர். இந்த வரிசையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்துள்ளார். அதன்படி, நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 16 ஆண்டுகள் 286 நாட்கள் இடைவெளி இல்லாமல் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இந்திரா காந்தி, முதல் தொடர்ச்சியான பதவிக் காலத்தில் 11 ஆண்டுகள் 59 நாட்கள் பிரதமராக இருந்தார் (மொத்தம் 15 ஆண்டுகள், அனைத்து பதவிக் காலங்களையும் சேர்த்து 350 நாள்கள்). மன்மோகன் சிங் 10 ஆண்டுகள், 4 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்தார். தற்போது, பிரதமர் நரேந்திர மோடி மன்மோகன் சிங், இந்திரா காந்தி ஆகியோரை பின்னுக்கு தள்ளி நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்த 2- ஆவது பிரமராகியுள்ளார்.
பிரதமர் பதவியில் தொடரும் நரேந்திர மோடி
அதன்படி, அவர் கடந்த 2014-ஆம் ஆண்டு மே 26- ஆம் தேதி முதல் முறையாக பிரதமராக பதவியேற்றார். அதன்பின்னர், 2019- ஆம் ஆண்டு மே 30- ஆம் தேதி 2- ஆவது முறையாக பிரதமரானார். பின்னர், 2024- ஆம் ஆண்டு ஜூன் 9- ஆம் தேதி 3- ஆவது முறையாக பதவியேற்ற நரேந்திர மோடி 11 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமர் பதவியை வகித்து வருகிறார். ஒட்டு மொத்தமாக 2- ஆவது மிக நீண்ட காலம் பிரதமராக பணியாற்றியவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
மேலும் படிக்க: உலகின் உயரமான ரயில்வே பாலம்… முதல் செங்குத்து பாலம் வரை – உள்கட்டமைப்பில் இந்தியாவின் வரலாற்றுச் சாதனைகள்




காங்கிரஸ் அல்லாத கட்சியைச் சேர்ந்த நபர்
இதில், சில சிறப்புகளும் அடங்கியுள்ளன. அவை, காங்கிரஸ் அல்லாத கட்சியை சேர்ந்த பிரதமராகவும், நீண்ட காலம் பதவி வகித்த பிரதமராகவும் நரேந்திர மோடி இருந்துள்ளார். இதே போல 1947- ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பிறந்த முதல் மற்றும் ஒரே பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஜவஹர்லால் நேருவை தவிர தொடர்ந்து மூன்று தேசிய தேர்தல்களில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜகவின் ஒரே தலைவர் என்ற பெருமையும் இவரையே சாரும்.
நேருவின் சாதனையை நோக்கி பயணம்
இதே நிலை நீடித்து 2029 நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்றால் நேருவின் சாதனையையும் முறியடித்து ஒட்டு மொத்த இந்தியாவின் மிக நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையையும் அடைவார். இதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்திலும், மத்தியிலும் 24 ஆண்டுகள் அரசை வழிநடத்தியதற்கான மைல்கல்லை எட்டிப்பிடித்துள்ளார்.
மேலும் படிக்க: இந்திய பாதுகாப்புத் துறை 2025: ஆபரேஷன் சிந்தூர் முதல் பாதுகாப்புக் கொள்கை வரை; பாதுகாப்புத் துறையில் நாட்டின் வளர்ச்சி