YEAR ENDER 2025: விவசாயத்தை மேம்படுத்தும் சூப்பர் திட்டம்…மத்திய அரசின் 100 மாவட்ட பிளான்!
Pradhan Mantri Dhan Dhanya Krishi Yojana Scheme: மத்திய அரசின் பிரதான் மந்திரி தன் தான்யா கிரிஷ் யோஜனா என்ற விவசாயம் மற்று விவசாயிகளுக்கான இந்த திட்டமானது பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த திட்டம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மத்திய அரசு சார்பில் பிரதான் மந்திரி தன் தான்யா கிரிஷி யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் குறைந்த செயல் திறன் உடைய 100 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் விவசாயத்தை ஊக்குவிப்பது, உற்பத்தி திறனை அதிகரிப்பது, பயிர் பல்வகைப்படுத்துதலை ஊக்குவிப்பது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே போல, நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும் மற்றும் கடன் அணுகலை விரிவுபடுத்துதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது தற்போது உள்ள 36 திட்டங்கள் மற்றும் உள்ளூர் திட்டமிடல் மற்றும் நிலையான விவசாயத்திற்கான தனியார் கூட்டாண்மைகள் நீர் மற்றும் மண் ஆரோக்கியமான இயற்கை விவசாயம் மற்றும் அறுவடைக்கு பிறகு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.
அறுவடைக்கு பிந்தைய சேமிப்பு
மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் ஒட்டு மொத்த பண்ணை உற்பத்தியை அதிகரிப்பதுடன், பருப்பு வகைகளில் கவனம் செலுத்தி, பல்வேறு பயிர்களை விவசாயம் செய்வதற்காக விவசாயிகளை ஊக்குவிக்கும். கரிம மற்றும் இயற்கை விவசாயம், மண் மற்றும் நீர் பாதுகாப்பை ஆதரிக்கவும், உள்ளூர் மட்டங்களில் நீர் பாசன மற்றும் அறுவடைக்கு பிந்தைய சேமிப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.
மேலும் படிக்க: இனி மணிக்கு 80 கி.மீ வேகத்தில் சுங்கச்சாவடிகளை கடக்கலாம்.. விரைவில் வரப்போகும் அசத்தல் அம்சம்!




விவசாயிகளுக்கு குறுகிய, நீண்ட கால கடன்கள்
இதே போல, இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு குறுகிய மற்றும் நீண்ட கால கடன்கள் வழங்கப்படுகிறது. அதன்படி, 11 துறைகளின் கீழ் உள்ள 36 மத்திய திட்டங்களை மானிய திட்டங்களுடன் ஒருங்கிணைக்கிறது. மேலும், குறைந்த உற்பத்தி திறன் கொண்ட மாவட்டங்களில் விவசாய மேம்பாட்டுக்காக கவனம் செலுத்துவதுடன், ஒரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு குறைந்தபட்சம் ஒரு மாவட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
மத்திய நோடல் அதிகாரிகளின் கண்காணிப்பில்
இந்தத் திட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணிக்க டிஜிட்டல் டேஷ் போர்டு மற்றும் முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இதனை மத்திய நோடல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதற்கு நீதி ஆயோக் வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. இந்தியாவில் பருப்பு உற்பத்தி கணிசமாக அதிகரிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தத் திட்டமானது உள்ளூர் மண், காலநிலை மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு மிகுந்த பயனுள்ள திட்டம்
மேலும், சிறந்த சந்தை ஆண்டுகளுக்காக விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளை வலுப்படுத்தும் வகையிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் வளர்ச்சிக்காக ரூ. 24 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டமானது விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருந்து வருகிறது.
மேலும் படிக்க: YEAR ENDER 2025: 4- ஆவது பொருளாதார நாடாக உருவெடுத்த இந்தியா…3- ஆவது இடத்துக்கு முன்னேறும் நாள் வெகு தொலைவில் இல்லை!