Year Ender 202: புதிய தொழிலாளர் சட்டங்கள்…. தொழிலாளர்களுக்கு கிடைக்கும் 4 முக்கிய சலுகைகள் – என்ன தெரியுமா?
New Labour Codes : இந்த 2025 ஆம் ஆண்டில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய திட்டங்களில் புதிய தொழிலாளர் சட்டங்கள் மிக முக்கியமானது. இது இனி ஒப்பந்த ஊழியர்களுக்கும் பிஎஃப் போன்ற சலுகைகள் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த 2025 ஆம் ஆண்டில் மிக முக்கிய மாற்றமாக புதிய தொழிலாளர் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது தொழிலாளர் சட்டங்கள் முதன்முறையாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள் (New Labour Codes) அனைத்து துறைகளிலும் பணிபுரியும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் தினசரி வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக பணியிட பாதுகாப்பு, உடல் நிலை மற்றும் திட்டமிட்ட வேலை அமைப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது ஒப்பந்த ஊழியர்களுக்கும் பிஎஃப் வாய்ப்பு உள்ளிட்ட பலனளிக்கும் வகையில் சில நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
180 நாட்களிலேயே சம்பளத்துடன் விடுப்பு
இதுவரை, ஒரு ஊழியர் வருடத்தில் 240 வேலை நாட்கள் பூர்த்தி செய்த பிறகே ஆண்டு சம்பளத்துடன் விடுப்பு பெற தகுதி பெற்றிருந்தார். ஆனால், புதிய தொழிலாளர் சட்டங்களின்படி இந்த வரம்பு 180 வேலை நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தொழிலாளர்கள் விரைவாக விடுப்பு பெற முடியும். உற்பத்தித் துறை, நெசவு, சில்லறை வணிகம், கட்டுமானம் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு பெரும் நன்மை கிடைக்கும். உடல் ஓய்வு மற்றும் மன நலன் மேம்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது நீண்ட காலத்தில் உற்பத்தித் திறன் மற்றும் பணித் திருப்தி அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : EPFO 3.0: ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி… இந்த ஆண்டின் மிக முக்கிய அறிவிப்பு




வேலை நேரத்தில் மாற்றம்
வேலை நேரத்தில் ஏற்கனவே இருந்த தினமும் 8 மணி நேரம், வாரம் 48 மணி நேரம் வாரம் என்ற வரம்பு தொடரும். ஆனால், அந்த 48 மணி நேரத்தை எவ்வாறு பகிர்ந்தளிக்கலாம் என்பதில் புதிய நெகிழ்வு வழங்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, தினமும் அதிகபட்சம் 12 மணி நேரம் வேலை என்ற கணக்கில் வாரத்தில் 4 நாட்கள் வேலை, அதே போல தினமும் 9.5 மணி நேரம் வேலை என்ற அடிப்படையில் வாரத்தில் 5 நாட்கள் வேலை, அதே போல தினமும் 8 மணி நேரம் வேலை என்ற கணக்கல் வாரம் 6 நாட்கள் வேலை என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் பார்க்கும் நேரத்தின் அடிப்படையில், வாரத்தில் 3, 2, 1 நாள் என விடுமுறை இருக்கும். இந்த மாற்றம் ஊழியர்களுக்கு, வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை ஏற்படுத்தும்.
ஓவர்டைம் விதிகளில் தளர்வு
இனி நிறுவனங்கள் ஓவர்டைம் செய்ய, ஊழியரின் ஒப்புதலை பெறுவது அவசியமாகிறது. ஓவர் டைம் பார்த்தால் இரண்டு சம்பளம் என்ற விதி தொடரும். இதுவரை இருந்த ஒரு காலாண்டுக்கு 75 மணி நேரம் என்ற ஓவர் டைம் என்ற வரம்பு இனி கட்டாயமில்லை. மாநில அரசுகள் தங்களின் தேவைக்கு ஏற்பட ஓவர் டைம் வரம்பை நிர்ணயிக்கலாம். இதன் மூலம் விருப்பமுள்ள ஊழியர்கள் ஓவர் டைம் மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட முடயும். அதே நேரத்தில் ஓவர் டைம் பார்க்க வேண்டும் என ஊழியர்களை கட்டாயப்படுத்தவும் முடியாது.
இதையும் படிக்க : Year Ender 2025: ஜிஎஸ்டியில் ஏற்பட்ட மாற்றத்தால் 375 பொருட்களின் விலை குறைப்பு – மக்கள் மகிழ்ச்சி
40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச வருடாந்திர மருத்துவ பரிசோதனை
புதிய தொழிலாளர் சட்டங்களில் மிக முக்கியமான மாற்றமாக, 40 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் வருடத்திற்கு ஒருமுறை இலவச சுகாதார பரிசோதனை வழங்கப்படும். இதன் முக்கிய நோக்கம், தொழிலாளர்களின் நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல், நீண்ட கால மருத்துவ செலவுகளை குறைத்தல் வேலை நாட்கள் இழப்பை குறைத்தல் ஆகிய காரணங்களுக்காக இந்த நடைமுறை கொண்டுவப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்களை அரசு, தொழிலாளர்களுக்கான ஆதரவான சட்டங்கள் என விவரித்துள்ளது. இதனால் தொழிலாளர்களின் ஆரோக்கியம் மேம்படும், உற்பத்தி திறன் அதிகரிக்கும், பணி நிரந்தரம் உள்ளிட்ட இவை அனைத்தையும் இந்த புதிய தொழிலாளர் சட்டங்கள் உறுதி செய்யும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.