Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

EPFO 3.0: ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி… இந்த ஆண்டின் மிக முக்கிய அறிவிப்பு

Year Ender 2025: இந்த 2025 ஆம் ஆண்டு வெளியான மிகச்சிறந்த அறிவிப்புகளில் ஒன்றாக இபிஎஃப்ஓ 3.0 பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி, பெயர், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனிலேயே அப்டேட் செய்யும் வசதி ஆகியவை கொடுக்கப்பட்டன.

EPFO 3.0: ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி… இந்த ஆண்டின் மிக முக்கிய அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Dec 2025 14:59 PM IST

இந்த 2025 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கப்பட்ட மிக முக்கிய அறிவிப்புகளில் ஒன்று  பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் இபிஎஃப்ஓ 3.0. இந்த சேவையின் மூலம் மக்களுக்கு ஓய்வூதியம் மற்றும் அவசர தேவைகளுக்கு பணம் எடுத்துகொள்ளும் வகையில் வகையில் வடிவமக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்  ஏடிஎம் (ATM) மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கிய இபிஎஃப் 3.0 என்ற அறிவிப்பு இந்த வருடம் அறிவிக்கப்பட்டது. இந்த வசதி முன்பைக் காட்டிலும் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 2025 ஆம் ஆண்டு துவக்கத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டே அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தொழில்நுட்ப காரணங்களாலும் சில பணிகள் முடிவடையாததாலும், அடுத்த ஆண்டு தான் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இபிஎஃப்ஓ குறித்து முக்கிய முடிவெடுக்கும் சென்டரல் போர்டு ஆஃப் டிரஸ்டி குறித்து ஒப்புதல் வழங்கினால் இந்த திட்டம் உடனே செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : இந்தியா மீது மீண்டும் வரி விதிக்க தயாராகும் டிரம்ப்.. இந்த முறை விவசாயிகளை குறி வைக்கிறார்!

இபிஎஃப்ஓவில் என்ன மாற்றங்கள் வரப்போகிறது?

இபிஎஃப்ஓ 3.0 செயல்பாட்டுக்கு வந்தால், பணியாளர்களுக்கு பிஎஃப் தொகையை நிர்வகிப்பது இன்னும் எளிமையாகவும் வேகமாகவும் நடைபெறும். இதில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏடிஎம் மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி

உறுப்பினர்கள் தங்கள் இபிஎஃப் தொகையிலிருந்து ஒரு பகுதியை ஏடிஎம் மூலம் நேரடியாக எடுக்க முடியும். இதற்காக முன்பு போல இபிஎஃப்ஓ அலுவலகங்களில் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை, இணையதளங்களில் விண்ணப்பித்து காத்திருக்க தேவையில்லை. இதன் மூலம் உறுப்பினர்களுக்கு உடனடியாக பணம் கிடைக்கும்.

பிஎஃப் கிளெயிம் இனி தானாக செயல்படும்

இனி பிஎஃப் கோரிக்கைகள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி தானாகவே செட்டில் செயல்படும். இதனால் நீண்ட நாட்கள் காத்திருக்க தேவையில்லை.

கணக்கு விவரங்களை ஆன்லைனில் திருத்தும் வசதி

பெயர், பிறந்த தேதி, வங்கி விவரம் உள்ளிட்ட திருத்தங்களை, இபிஎஃப்ஓ அலுவலகம் செல்லாமல் ஆன்லைனில் நேரடியாக மாற்றலாம்.

இதையும் படிக்க : ஆதார் – பான் இணைக்கவில்லை என்றால் ஜன.1 முதல் இவற்றை செய்ய முடியாது!

ஒரே இடத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்கள்

அடல் பென்சன் யோஜனா, பிஎம் ஜீவன் ஜோதி பிமா யோஜனா போன்ற சமூக மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களையும் இபிஎஃப்ஓவுடன் இணைக்க திட்டமிட்டு வருகிறது.

ஓடிபி மூலம் உடனடி அங்கீகாரம்

பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து முக்கிய மாற்றங்களும் ஓடிபி மூலம் உடனடியாாக சரிபார்க்கப்படும்.

இபிஎஃப்ஓ 3.0 திட்டம் சில தொழில்நுட்ப மாற்றங்கள் நடைபெற்றுவருவதால் அதற்காக காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வங்கிகளுடனான ஒருங்கிணைப்பு பணிகளாலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.