Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பணி ஓய்வுக்கு முன்பு ரூ.1 கோடி வேண்டுமா?.. அப்போ இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!

Secure Your Retirement With This Mutual Fund | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பலான பொதுமக்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில், ஓய்வுகாலத்தை நிதி பற்றாக்குறை அற்றதாக மாற்ற உதவும் மியூச்சுவல் ஃபண்ட் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

பணி ஓய்வுக்கு முன்பு ரூ.1 கோடி வேண்டுமா?.. அப்போ இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 03 Dec 2025 13:27 PM IST

ஒருவர் பணியில் இருக்கும்போது அவருக்கு பெரிதாக பொருளாதார சிக்கல்கள் எதுவும் ஏற்படாது என்றாலும், அந்த நபர் பணி ஓய்வு பெறும்போது பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். காரணம், பணி ஓய்வுக்கு பிறகு சிலருக்கு மாத வருமானம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும். சிலருக்கு குறைந்த அளவிளான ஓய்வூதியம் வழங்கப்படும். இவை இரண்டுமே அனைத்து விதமான பொருளாதார தேவைகளையும் பூர்த்தி செய்துக்கொள்ள போதுமானதாக இருக்காது. இந்த சூழலில் பலரும் கடுமையான நிதி சவால்களை எதிர்க்கொள்வர். இத்தகைய சிக்கல்களை தவிர்க்க சிலர் தங்களது இளமை காலம் முதலே முதுமைக்காக சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய தொடங்குவர். இந்த நிலையில், பணி ஓய்வுக்கு முன்பாகவே ரூ.1 கோடி பணம் சேமிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஓய்வு காலத்தை பாதுகாப்பானதாக மாற்றும் ரிட்டயர்மென்ட் மியூச்சுவல் ஃபண்டுகள்

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கின்றனர். மியூச்சுவல் ஃபண்டுகள் அதிக லாபம் தரக்கூடியவையாக உள்ள நிலையில், பலரும் அவற்றில் முதலீடு செய்கின்றனர். அந்த வகையில் ஓய்வு காலத்தை நிதி பாதுகாப்பானதாக மாற்றும் வகையில் சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன. அவை தான் ஓய்வு மியூச்சுவல் ஃபண்ட் (Retirement Mutual Fund).

இதையும் படிங்க : Credit Card : கிரெடிட் கார்டு மோசடி நடைபெற்றால் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷ்யங்கள் இதுதான்!

ரிட்டயர்மென்ட் மியூச்சுவல் என்றால் என்ன?

ரிட்டயர்மென்ட் மியூச்சுவல் ஃபண்ட் என்பது நீங்கள் வேலை செய்யும் காலம் முடிந்த பிறகு, அதாவது உங்களது ஓய்வு காலத்தின்போது உங்களது அன்றாட பண தேவைகள் மற்றும் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வதற்கான நிதி தொகையை உருவாக்குவதற்கான பிரதயேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள திட்டமாகும். இந்த மியூச்சுவல் ஃபண்ட் தீர்வு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் (Solution Oriented Mutual Fund) என்ற வகையின் கீழ் வருகிறது.

இதையும் படிங்க : Provident Fund : அதிரடியாக உயரப்போகும் பிஎஃப் வட்டி.. வெளியான முக்கிய தகவல்!

இந்த திட்டத்தில் நீங்கள் ஓய்வு பெறுவதற்கு எவ்வளவு காலம் உள்ளது என்பதனை கணக்கிட்டு அதற்கு ஏற்ப முதலீடு செய்யும் பட்சத்தில் உங்களால் உங்களது ஓய்வுக்கு முன்பாகவே ரூ.1 கோடி பணத்தை பெற முடியும்.