ஆதார் – பான் இணைக்கவில்லை என்றால் ஜன.1 முதல் இவற்றை செய்ய முடியாது!
PAN and Aadhaar Card Link | டிசம்பர் 31, 2025-க்குள் பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. அவ்வாறு பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்கவில்லை என்றால் ஜனவரி 1, 2026 முதல் இந்த விஷயங்களை உங்களால் செய்ய முடியாது.
இந்தியாவில் பண பரிவர்த்தனை செய்வது முதல் தனியாக வங்கி கணக்கு திறக்க வேண்டும் என்றாலும் கூட பான் கார்டு (PAN – Permanent Account Number Card) மிக முக்கிய ஆவணமாக உள்ளது. பான் கார்டு இத்தைய முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ள நிலையில், பான் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு ஜனவரி 1, 2026 முதல் புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது என்ன என்ன விதிகள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிசம்பர் 31, 2025-க்குள் பான் – ஆதாரை இணைக்கவில்லை என்றால் சிக்கல் தான்
சிபிடிடி என்னும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes), பான் எண்ணை ஆதார் கார்டு (Aadhaar Card) உடன் இணைப்பதற்கு டிசம்பர் 31, 2025 தான் கடைசி தேதி என அறிவித்துள்ளது. வங்கி, பணப் பரிவர்த்தனை மற்றும் வருமான வரி தாக்கல் ஆகிய நோக்கங்களுக்காக சிங்கிள் மற்றும் சரிப்பார்க்கப்பட்ட அமைப்பை நிறுவுவதை இது நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நிலையில், டிசம்பர் 31, 2025-க்குள் பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைக்கும் நபர்கள் தங்களது பான் கார்டை எந்த வித சிக்கலும் இல்லாமல் பயன்படுத்த முடியும். ஆனால், பான் மற்றும் ஆதாரை இணைக்காமல் இருக்கும் நபர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொள்ள கூடும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ரெப்போ வட்டி குறைப்பு எதிரொலி.. வீடு, வாகன கடன் வட்டி விகிதம் குறையபோகுது




பான் – ஆதாரை இணைக்கவில்லை என்றால் என்ன என்ன சிக்கல்கள் ஏற்படும்?
காலக்கெடுக்குள் பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்காத நபர்களின் பான் கார்டு செயலிழந்துப்போகும். இதன் காரணமாக அவர்களால் பண பரிவர்த்தனை செய்வது முதல் பல்வேறு விஷயங்களில் கடும் சிக்கல்களை சந்திக்க நேரிடும். பான் மற்றும் ஆதார் இணைக்காதவர்களின் பான் கார்டு ஜனவரி 1, 2026 முதல் செயலற்று போய்விடும். இந்த சூழலில் அந்த பான் கார்டை வைத்திருக்கும் நபரால் வருமான வரி தாக்கல் செய்வது, வருமான வரி திரும்ப பெறுவது, பண பரிவர்த்தனைகளில் இடையூறு ஆகியவற்றை சந்திக்க நேரிடும்.
இதையும் படிங்க : ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த ஆர்பிஐ.. யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்?
இந்த சிக்கல்களை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் டிசம்பர் 31, 2025-க்குள் பான் மற்றும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.