Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Lakme, Westside நிறுவனங்களை கட்டமைத்த டாடா குழுமத்தின் முக்கிய நபர்.. சிமோன் டாடா காலமானார்!

Simone Tata Dies at the Age of 95 | டாடா குழுமத்தின் முக்கிய நபரும், ரத்தன் டாடாவின் வளர்ப்பு தாயுமான சிமோன் டாடா நேற்று (டிசம்பர் 05, 2025) காலமானார். அவரின் இறுதி ஊர்வலம் இன்று (டிசம்பர் 06, 2025) நடைபெறுகிறது.

Lakme, Westside நிறுவனங்களை கட்டமைத்த டாடா குழுமத்தின் முக்கிய நபர்.. சிமோன் டாடா காலமானார்!
சிமோன் டாடா மரணம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Dec 2025 12:03 PM IST

இந்தியாவில் டாடா குழுமத்தை (Tata Group) தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு மிகுந்த ஆளுமை கொண்ட வணிக குழுவாக டாடா உள்ளது. டாடா என்றதும் பெரும்பாலான நபர்களுக்கு ரத்தன் டாடா (Ratan Tata) தான் நினைவுக்கு வருவார். ரத்தன் டாடா இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் செய்த சேவைகளே அதற்கு முக்கிய காரணம். ரத்தன் டாடா எவ்வாறு மிகப்பெரிய ஆளுமையாக விளங்கினாரோ அதே போல டாடா குழுமத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவர் தான் சிமோன் டாடா (Simone Tata). லேக்மே (Lakme), வெஸ்ட் சைடு (Westside) ஆகியவற்றின் பின்னால் இருந்து இயங்கிக்கொண்டு இருந்த இவர் தனது 95 வயதில் காலாமாகியுள்ளார். யார் இந்த சிமோன் டாடா, அவர் செய்த பணிகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

லேக்மே, வெஸ்டு சைடுக்கு முதுகு தண்டாக இயங்கிய சிமோன் டாடா

லேக்மே இந்தியாவில் இத்தகைய மிகப்பெரிய அழுகுசாதன் பொருள் பிராண்டா மாற முக்கிய காரணமே சிமோன் டாடா தான். லேக்மே இத்தகைய அபார வளர்ச்சி அடையவும், வெஸ்டு சைடு கடைகள் விரிவாக்கம் செய்யப்படவும் அவரது பணி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இவர் சுவிசர்லாந்தின், ஜெனிவா பகுதியில் பிறந்தவர். 1953 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுலா வந்தபோது அவர் நாவல் டாடாவை சந்தித்துள்ளார். பிறகு அவர்கள் இருவரும் 1955 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். அதன் பிறகு சிமோன் மும்பையிலே நிரந்தரமாக வசிக்க தொடங்கினார்.

இதையும் படிங்க : தனிநபர் கடன்கள்.. இந்தியாவின் டாப் 5 வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் இவை தான்!

95 வயதில் இயற்கை எய்தினார் சிமோன் டாடா

1980 ஆம் ஆண்டில் லேக்மே நிறுவனத்தின் சேர்மேனாக சிமோன் நியமனம் செய்யப்பட்டார். லேக்மே அப்போது மிகவும் மோசமான நிலையில் இருந்தபோது, தனது முயற்சியால் அந்த நிறுவனத்தை இந்தியாவின் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக உயர்த்தினார். பிறகு 1996 ஆம் ஆண்டு லேக்மே நிறுவனத்தை டாடா குழுமம் ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் குழுமத்திற்கு விற்பனை செய்துவிட்டது. அதன் பிறகு வெஸ்டு சைடு என்னும் மற்றொரு சாம்ராஜ்யத்தை சிமோன் டாடா உருவாக்கினார். டாடா குழுமத்தில் இத்தகைய முக்கிய பங்கு வகித்த சிமோன் டாடா, ரத்தன் டாடாவின் வளர்ப்பு தாய் ஆவார்.

இதையும் படிங்க : வீட்டில் இருந்தபடியே ஆதாரில் மொபைல் எண்ணை மாற்றலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

இவர் கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று (டிசம்பர் 05, 2025) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது 95 வயதில் காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று (டிசம்பர் 06, 2025) நடைபெறுகின்றன.